/indian-express-tamil/media/media_files/2024/12/20/YDlHxXlobPU24k5miJ10.jpg)
2024-ல் திருமணம் செய்த சினிமா பிரபலங்கள் சிலர்
/indian-express-tamil/media/media_files/2024/12/12/keerthi-antony3.jpg)
கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி தட்டில்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது நீண்ட வருட காதலர் ஆண்டனி தட்டில் என்பரை கோவாவில் திருமணம் செய்துகொண்டார்.
/indian-express-tamil/media/media_files/sidda-aditi2.jpg)
சித்தார்த் – அதிதி ராவ்
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், நடிகை அதிதி ராவ் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 16-ந் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
/indian-express-tamil/media/media_files/QYRglKGXmJV8BEUdHFg7.jpg)
மேகா ஆகாஷ் – சாய் விஷ்ணு
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மேகா ஆகாஷ், நடிகர் சாய் வி்ணுவை கடந்த செப்டம்பர் 15-ந் தேதி திருமணம் செய்துகொண்டார்.
/indian-express-tamil/media/media_files/uJr57XKULOwBZdk3XDKL.jpg)
வரலட்சுமி சரத்குமார் – நிகோலாய் சச்தேவ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், கடந்த ஜூலை மாதம் தாய்லாந்தை சேர்ந்த தொழிலதிபர் நிகோலாய் சச்தேவ் என்பவரை திருணம் செய்துகொண்டார்.
/indian-express-tamil/media/media_files/eWcCqCWMpEmGESoN23IT.jpg)
ஐஸ்வர்யா அர்ஜூன் – உமாபதி தம்பி ராமையா
நடிகர் அர்ஜூனின் மகளும், நடிகர் தம்பி ராமையாவின் மகனும் கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். ஐஸ்வர்ய விஷாலின் பட்டத்து யானை திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில், உமாபதி தனது தந்தை தம்பி ராமையா நடிப்பில் ராஜாகிளி என்ற படததை இயக்கியுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/09/nxDDCe5paIUTGiWUwxHK.jpg)
காளிதாஸ் ஜெயராம் – தாரிணி காளிங்கராயர்
பிரபல நடிகர் ஜெயராமின் மகனும், சுதாரா கொங்கரா இயக்கத்தில் வெளியான பாவக்கதைகள் ஆந்தாலஜி படத்தில் திருநங்கையாக நடித்து பிரபலமானவருமான காளிதாஸ் ஜெயராம் தாரிணி காளிங்கராயர் என்பரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/20/y3UKrpXs0NrCuZw0gprs.jpg)
அபர்னா தாஸ் – தீபக் பரம்போல்
பீஸ்ட் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து கவினின் டாடா படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான நடிகை அபர்னா தாஸ், தீபக் பரம்போல் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
/indian-express-tamil/media/media_files/pgiWuCmFjYMNRxxwtPZh.jpg)
மீதா ரகுநாத்
குட்நைட் படத்தின் மூலம் பிரபலமான நடிகை மீதா ரகுநாத், கடந்த மார்ச் 17-ந் தேதி திருமணம் செய்துகொண்டார்.
/indian-express-tamil/media/media_files/SJu3Mo8PhZGgTpX7zjDV.webp)
சுவாசிகா – பிரேம் ஜேக்கப்
லப்பர் பந்து படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை சுவாசிகா, மலையாள டிவி நடிகரு பிரேம் ஜேக்கப் என்பவரை காதலித்து வந்த நிலையில், இவர்கள் திருமணம், கடந்த ஜனவரி 24-ந் தேதி நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/1oSNczjVuWJQwOSfSW8c.jpg)
நாக சைதன்யா – சோபிதா துலிபாலா
நடிகை சமந்தாவை திருமணம் செய்து விவாகரத்து செய்த நடிகர் நாக சைதன்யா, கடந்த டிசம்பர் 4-ந் தேதி நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்துகொண்டார்.
/indian-express-tamil/media/media_files/jppGf3EZIu1bPpQRxgUO.jpg)
டாப்சி - மத்தியாஸ் போவ்
தமிழ், தெலுங்கு, இந்தியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரும் டாப்சி, டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மத்தியாஸ் போவை காதலித்து கடந்த மார்ச் 23-ந் தேதி திருமணம் செய்துகொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/03/HZ4Jur54VNaH7eStTNtW.jpg)
ரகுல் பிரீத்-ஜாக்கி பக்னானி
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரகுல் ப்ரீத் சிங், கடந்த பிப்ரவரி மாதம் 21-ம் தேதி இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் நடந்தது.
/indian-express-tamil/media/media_files/ywv32G1pl6hLFK5QSdnV.jpg)
சோனாக்சி சின்ஹா-சாஹீர் இக்பால்
லிங்கா படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா, பல வருடங்களாக நடிகர் சாஹீர் இக்பாலை காதலித்து வந்தார். இதனையடுத்து, இவர்களது திருமணம் கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/2024/12/20/23WX6HSOsJcWS2Rk2kUW.webp)
புல்கித் சாம்ராட் - கிருத்தி கர்பந்தா
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'வீரே கி' திரைப்படத்தில் நடித்த புல்கித் சாம்ராட் மற்றும் கிருத்தி கர்பந்தா இருவரும் காதலிப்பதாகவும் டேட்டிங் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியான நிலையில், கடந்த மார்ச் 15-ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.