2024-ம் ஆண்டு இறுதிக்கட்டத்தை நெருக்கிவிட்ட நிலையில், நடப்பு ஆண்டில் இதுவரை நிகழ்ந்த நிகழ்வுகள் குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக திரைத்துறையில், இந்த வரும் அதிக வசூல் செய்த படங்கள், அதிகமாக விமர்சிக்கப்பட்ட படங்கள் என பல தகவல்கள் வெளியாவது அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளாக இருக்கும்.
அந்த வரிசையில் தற்போது, 2024-ம் ஆண்டில் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 பாடல்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில், ஓரிரு தமிழ் பாடல்கள் மற்றும் தெலுங்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளது.
10-வது இடத்தில் சுட்டாமல்லி (தேவரா)
சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான தேவரா படத்தில் இடம் பெற்ற சுட்டாமல்லி பாடல் இந்த பட்டியலில் 10-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிக ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ஷில்பா ராவ் இந்த பாடலை பாடியிருந்தார்.
9-வது இடத்தில் எம்மி எம்மி (ஆல்பம்)
எம்மி எம்மி இசை ஆல்பத்தில் வெளியான இந்த பாடல் இந்த பட்டியலில் 9-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய சினிமாவின் பிரபல பாடகியாக வலம் வரும் ஸ்ரோயா கோஷல் பாடிய இந்த பாடல், பெரிய வரவேற்பினை பெற்று வந்தது. ரஜத் நக்பால், நைத்ஜிகோ, டைக் ஆகியோரும் இந்த பாடலை இணைந்து பாடியிருந்தனர்.
8-வது இடத்தில் ஆக்ஷியம் குலாப் (தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா)
பாலிவுட் இயக்குனர் அமித் ஜோஷி இயக்கத்தில் வெளியான தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா படத்தில் இடம்பெற்ற ஆக்ஷியம் குலாப் என்ற பாடல் இந்த பட்டியலில் 8-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பாடலை எழுதி இசையமைத்து மிட்ராஸ் என்பவர் பாடியிருந்தார்.
7-வது இடத்தில் அச்சோ அச்சோ அச்சச்சோ (அரண்மனை 4)
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான 2024-ம் ஆண்டு பெரிய வெற்றியை கொடுத்த தமிழ் படங்களில் ஒன்றாக இருக்கும் அரண்மனை படத்தில் இடம்பெற்ற ‘அச்சோ அச்சோ அச்சச்சோ’ இந்த பட்டியலில் 7-வது இடத்தை பிடித்துள்ளது. காரிஷ்மா ரவிச்சந்திரன், ஸ்ரீநிஷா ஜெயசீலன் ஆகியோர் இந்த பாடலை பாடியிருந்தனர்.
6-வது இடத்தில் குலாபி சாடி (ஆல்பம்)
2024-ம் ஆண்டு இந்தியில் வெளியான குலாபி சாடி என்ற ஆல்பம் பாடல் இந்த பட்டியலில் 6-வது இடத்தை பிடித்துள்ளது.
5-வது இடத்தில் ஆயிநய் (ஸ்ரீ2)
2024-ம் ஆண்டு ராஜ்குமார் ராவ், ஷர்தா கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியான ஸ்ரீ2 படத்தில் இடம் பெற்ற ஆயிநய் என்ற பாடல் இந்த பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளது.
4-வது இடத்தில் தோபப்பா (பேட் நியூஸ் ஆல்பம்)
2024-ம் ஆண்டு வெளியான பேட் நியூஸ் என்ற ஆல்பத்தில் இடம்பெற்ற, தோபப்பா என்ற பாடல் இந்த பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளது.
3-வது இடத்தில் தெரி பாடன் மீ ஆஸ்யா (தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா)
பாலிவுட் இயக்குனர் அமித் ஜோஷி இயக்கத்தில் வெளியான தேரி பாடன் மெய்ன் ஐசா உல்ஜா ஜியா படத்தில் இடம்பெற்ற தெரி பாடன் மீ ஆஸ்யா என்ற பாடல் இந்த பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பாடலை ராகவ், தனிஷ்க் பாக்ஸி ஆகியோர் பாடியிருந்தனர்.
2-வது இடத்தில் குர்ச்சி மததபெட்டி (குண்டூர் காரம்)
மகேஷ்பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம் படத்தில் இடம் பெற்ற குர்ச்சி மததபெட்டி என்ற பாடல் இந்த பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பாடலின் நடனம் பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பாடலும் ஹிட் அடித்துள்ளது.
முதலிடத்தில் ஆஜ் கி ராத் (ஸ்ரீ2)
2024-ம் ஆண்டு ராஜ்குமார் ராவ், ஷர்தா கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியான ஸ்ரீ2 படத்தில் இடம் பெற்ற ஆஜ் கி ராத் என்ற பாடல் இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“