/indian-express-tamil/media/media_files/2025/08/03/nadhaswaram-serial-2025-08-03-15-20-04.jpg)
இந்திய தொலைக்காட்சியில் சன் டிவியில் ஒளிபரப்பான 'நாதஸ்வரம்' என்ற சீரியல், 1000-வது எபிசோடிற்காக 23 நிமிடம் 25 வினாடிகள் தொடர்ச்சியான சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டு, (longest Continuous TV Camera Shot (Live) கின்னஸ் உலக சாதனையை பெற்றது. இந்த எபிசோடு 2014 மார்ச் 5 அன்று காரைக்குடி அருகே உள்ள பல்லத்தூர் கிராமத்தில் லைவ் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. இந்நிலையில் சீரியல் கின்னஸ் சாதனைக்காக படமாக்கப்பட்ட காட்சிகளில் சீரியல் நடிகை ஸ்ருதி சண்முக ப்ரியா நடித்த அனுபவத்தை பற்றி சன் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தமிழ் சீரியலான 'நாதஸ்வரம்' கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்த சீரியலின் 1000-வது எபிசோடானது, 23 நிமிடம் 25 விநாடிகள் தொடர்ச்சியான 'சிங்கிள் ஷாட்டில்' படமாக்கப்பட்டது. அதாவது, ஒருமுறை கூட கேமராவை நிறுத்தாமல், ஒரே டேக்கில் இந்த எபிசோடின் முழு காட்சியும் படமாக்கப்பட்டது.
இந்த சிறப்பு எபிசோடின் படப்பிடிப்பு, 2014 மார்ச் 5 அன்று காரைக்குடிக்கு அருகே உள்ள பல்லத்தூர் கிராமத்தில் நடைபெற்றது. இதை மேலும் சிறப்புமிக்கதாக்க, இந்த எபிசோடானது படப்பிடிப்பு நடக்கும்போதே தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது போன்ற ஒரு முயற்சியை தமிழக தொலைக்காட்சியில் முதன்முதலாக மேற்கொண்டதும் இந்த சீரியல் தான்.
பிரபல இயக்குநர் திருமுருகன் இந்த சீரியலை இயக்கினார். மேலும் அவரே சீரியலின் கதாநாயகனாகவும் நடித்தார். இந்த சீரியல், ஒரு இசைக் குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை, உறவுமுறைகள், சவால்கள் போன்றவற்றை யதார்த்தமாக சித்தரித்தது. இந்த சீரியலின் வெற்றிக்கு திருமுருகனின் நேர்த்தியான இயக்கமும், நடிகர்களின் சிறப்பான நடிப்பும் முக்கிய காரணங்களாக அமைந்தன.
இறுதியாக, 'நாதஸ்வரம்' சீரியல், ஒரே டேக்கில் படமாக்கப்பட்டதன் மூலமும், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதன் மூலமும், தமிழ் சீரியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி, அதன் மூலம் கின்னஸ் சாதனையையும் படைத்துள்ளது. இந்த சீரியலில் நடித்த ஸ்ருதி சண்முக ப்ரியா அந்த அரைமணி நேர லைவ்வில் தானும் முழுக்காட்சிகளில் நடித்திருப்பதாகவும் தூக்குப்போடுவது சண்டையிடுவது போன்ற காட்சிகள் இருந்ததாகவும் அதற்காக வெறும் மூன்று நாட்கள் மட்டும் ரிஹர்சல் பார்த்ததாகவும் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.