/tamil-ie/media/media_files/uploads/2018/01/a49.jpg)
ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 'முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தான் என்னை பெற்றவர். அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரத்யா எனும் மகள் இருக்கிறார்.
இந்த நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த சங்கீத் குமார் என்பவர், ஐஸ்வர்யா ராய் தான் எனது தாய். நான் அவருக்குத் தான் பிறந்தேன் என்று புதிய பீதியை கிளப்பியுள்ளார். இதுகுறித்து சங்கீத் குமார் கூறுகையில், "எனது சொந்த ஊர் விசாகப்பட்டினம். 1988ம் ஆண்டு லண்டனில் ஐஸ்வர்யா ராய்க்கு மகனாக பிறந்தேன்.
ஐஸ்வர்யாவின் தந்தை கிருஷ்ணராஜ் ராய், தாய் வ்ரிந்தா ராய் ஆகியோர் என்னை இரண்டு வயது வரை வளர்த்தார்கள். அதன் பிறகு எனது தந்தை ஆடிவேலு ரெட்டி, என்னை விசாகப்பட்டினத்திற்கு அழைத்து வந்து என்னை வளர்த்தார். எனது தாயிடம் இருந்து நான் 27 ஆண்டுகளாக பிரிக்கப்பட்டு வளர்ந்தேன். இதனால், இப்போது நான் என் தாயுடன் வாழ விரும்புகிறேன்" என்று மீடியாக்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
ஆனால், சங்கீத் ஐஸ்வர்யா ராயுக்கு தான் பிறந்தார் என்பதை நிரூபிக்க அவரிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லை.
இதுமட்டுமல்ல, அவர் இன்னொரு பீதியையும் கிளப்பியுள்ளார். தற்போது ஐஸ்வர்யா, அபிஷேக் பச்சனுடன் இணைந்து வாழவில்லை எனவும், அவர் தனியாக பிரிந்து வந்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.