New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/11/ajith.jpg)
அவருக்காக 3 ஆக்ஷன் கதைகள் வைத்திருக்கிறேன்.
நடிகர் அஜித் தற்போது ’நேர்க்கொண்ட பார்வை’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதனை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
’பிங்க்’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகிவரும் இதனை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.
இந்நிலையில், அஜித் இந்திப் படங்களிலும் நடிப்பார் என நம்புவதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.
Saw the rushes of #NerkondaPaaravai. Happy... What a performance by Ajith.... I hope he agrees to do Hindi films soon. Have 3 action scripts, hope he says yes to atleast one of them. #NerkondaPaaravai #Ajithkumar
— Boney Kapoor (@BoneyKapoor) April 10, 2019
நேர்க்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் நடிப்பைப் பார்த்துவிட்டு, அவரை இந்தி படங்களில் நடிக்க வைக்க விரும்புகிறாராம் போனி. அதோடு அதனை அவரே தயாரிக்கவும் விரும்புகிறாராம். “நேர்க்கொண்ட பார்வை படத்தின் காட்சிகளைப் பார்த்தேன். என்ன ஒரு நடிப்பு. அவர் இந்தியிலும் நடிக்க ஒத்துக் கொள்வார் என நம்புகிறேன். ஏற்கனவே அவருக்காக 3 ஆக்ஷன் கதைகள் வைத்திருக்கிறேன். அதில் ஒன்றையாவது அவர் டிக் செய்யக் கூடும்” என ட்வீட் செய்திருக்கிறார்.
அதனால் அஜித்தின் இந்தி பிரவேசத்தை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.