Advertisment

36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நாயகன் கூட்டணி : அறிவிப்பு வீடியோ வைரல்

1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு, கமல்ஹாசன் 234 படத்தில் இணைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Maniratnam Kamal Haasan

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம்

ஆங்கிலத்தில் படிக்க : 36 years after Nayakan, Kamal Haasan and Mani Ratnam join hands for KH234. Watch announcement video

Advertisment

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசன் சினிமாவில் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், அடுத்து அவர் 36 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். 2018-ம் ஆண்டு விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு 4 வருடங்கள் இடைவெளி விட்ட இவர், கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான இந்த படம் கமல்ஹாசனின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் குவித்த பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

விக்ரம் தந்த வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதிலும், நடிப்பதிலும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்துள்ள கமல்ஹாசன் அடுத்து இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கே.எச் 233, மற்றும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கே.எச்.234 உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளார்.

இதில் எச்.வினோத் படம் முடிந்த பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  தற்போது மணிரத்னம் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனால் இரு படங்களிலும் கமல் ஒரு நேரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம், கைதி, லியோ, மற்றும் டாக்டர் போன்ற படங்களில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பரிவ் இந்த படத்திற்கு ஸ்டண்ட் காட்சிகளை அமைக்க உள்ளனர்.

1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்திய சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படும் நாயகன் படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது மீண்டும் இருவரும் இணைந்துள்ள படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இதற்கிடையில், கமல்ஹாசன் சமீபத்தில் விஜய்யின் நடிப்பில் வெளியான லியோ படத்தில் குரல் கொடுத்திருந்தார். இந்த படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் சினிமா பிரபஞ்சத்தின் ஒரு பகுதி என்பதை உறுதிப்படுத்தியது. தற்போது தமிழ் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இன் தொகுப்பாளராகவும் கமல் பிஸியாக இருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Maniratnam Kamalhaasan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment