Super Star Rajinikanth's Unseen Pictures: இந்திய சினிமாவில் பெரும் புகழ் பெற்றவர்களில் ஒருவரான நடிகர் ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 44 ஆண்டுகளை கடந்திருக்கிறார். முதன்மையான தமிழ் நடிகர் என்று அறியப்பட்டாலும், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களிலும் தலைவர் (அவரது ரசிகர்கள் அழைக்கும் பெயர்) நடித்துள்ளார்.
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் மிக முக்கிய நட்சத்திரமாக ரஜினி இருப்பதால், அவர் ஒரு மராட்டியர் என்பதை எளிதாக மறந்து விட முடிகிறது. ஆம்! டிசம்பர் 12, 1950 அன்று தான் சிவாஜி ராவ் கெய்க்வாட் (ரஜினியின் நிஜ பெயர்) பிறந்தார்.
ஸ்டைலான ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினி தனது 25 வயதில் ’அபூர்வ ராகங்கள்’ என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னாட்களில் ரஜினிக்கு போட்டியாகக் கருதப்பட்ட கமல் ஹாசனும் இந்தப் படத்தில் நடித்திருந்தார்.
ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி...
ரஜினிகாந்தின் முதல் இந்தி படம் 1982-ஆம் ஆண்டில் வெளியான ’அந்த கனூன்’.
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல
கடந்த 2016 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருது வழங்கி, ரஜினியை கவுரவித்தது இந்திய அரசு.
ஸ்ரீதேவியுடன் ரஜினி...
உண்மையிலேயே ரஜினியின் படங்கள் அனைத்தும் திருவிழாக்கள் தான். உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், ரஜினியின் ஒவ்வொரு படங்களையும் அப்படித்தான் கொண்டாடுகிறார்கள்.
கெட்ட பய சார் இந்த காளி
தலைவர் கடைசியாக ’பேட்ட’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக ‘தர்பாரில்’ நடித்துக் கொண்டிருக்கிறார்.
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா, சின்ன குழந்தையும் சொல்லும்...
பன்முகத் தன்மையான நடிப்பால், தனது படங்கள் நீண்ட ஆயுளுடன் நிலை பெற காரணமாக இருக்கிறார் ரஜினி. இயக்குநர்கள் தேர்வு செய்யும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சயின்ஸ் ஃபிக்ஷன் உட்பட, பல்வேறு ஜானர்களிலும் நடித்துவிட்டார். 2010-ல் வெளியான அவரது ’எந்திரன்’, அதிக பொருட்செலவில் அப்போது உருவான இந்திய படம். அதன் இரண்டாம் பாகமான 2.0 2018-ல் வெளியானது.
பாலிவுட் படத்தில் ரஜினி...’
தலைவர் இன்னும் பல படங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் உலகெங்கிலும் இருக்கும் ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பு!