scorecardresearch

நடிகர் விமல் மீது ரூ.5 கோடி மோசடி புகார்

5 Crore Fraud Complaint Against Tamil Actor vimal,Tamil Actor Vimal Accused of Embezzling Rs.5 Crore / நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் கோபி என்பவர் ஐந்து கோடி ரூபாய் மோசடி புகார் அளித்துள்ளார்.

நடிகர் விமல் மீது ரூ.5 கோடி மோசடி புகார்
5 Crore Fraud Complaint Against Actor vimal,A complaint Against actor vimal

Kalavani -2 Producer lodged complaint against Actor vimal,5 Crore  fraud by Actor vimal : நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் ஒருவர் மோசடி புகார் கொடுத்துள்ள நிகழ்வு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறுசிறு கேரக்டரில் நடித்து பின்னாளில் ஹீரோவாக உயர்ந்தவர் நடிகர் விமல். 2009-ம் ஆண்டு வெளியான பசங்க படத்தின் மூலம் ஹீரோவாக உயர்ந்த இவர், தொடர்ந்து களவாணி, வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மஞ்சப்பை, உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து முனனணி நடிகராக உயர்ந்தார்.

நடிப்பு மட்டுமல்லாமல், மன்னர் வகையாரா என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். 2020-ம் ஆண்டு இவர் நடிப்பில் கன்னிராசி என்ற படம் வெளியானது. அதன்பிறகு கடந்த 2 வருடங்களாக இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் நடித்த விலங்கு வெப் தொடர் ஒடிடி தளத்தில் வெளியானது.

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்து விமல் நடிப்பில் வரிசையாக படங்கள் வெளியாக உள்ளன. இந்நிலையில், நடிகர் விமல் மீது, சென்னை பெரவள்ளூரை சேர்ந்த கோபி என்ற சினிமா தயாரிப்பாளர் விமல் மீது 5 கோடி மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.

மன்னர் வகையாறா படம் தயாரிக்கும்போது விமல் தன்னிடம் 5 கோடி கடன் வாங்கியதாகவும், அந்த படத்தின் மூலம் வரும் பணத்தில் லாபம் தருவதாகவும் கூறியிருந்தார். ஆனால் என்னிடம் வாங்கிய 5 கோடி கடனை திரும்ப கொடுக்கவில்லை. பணத்தை திரும்ப கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார். எனவே அவரிடம் இருந்து எனது 5 கோடி ரூபாய் பணத்தை திரும்ப பெற்று தருமாறு தனது மனுவில் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: 5 crore fraud complaint against tamil actor vimal