பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிறைய படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. இந்த படங்களுக்கு செல்ல வேண்டும் என்று பலர் நினைத்திருக்கலாம். சிலருக்கு தாங்கள் நினைத்த படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் இருக்கலாம். மேலும் சிலர் வீட்டில் குடும்பத்தினருடன் சேர்ந்து ஏதாவது படம் பார்க்கலாம் என்றும் நினைப்பார்கள்.
அந்த வகையில் ஃபீல் குட், த்ரில்லர் போன்ற 5 திரைப்படங்கள் இங்கே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றை உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து ஓடிடி தளத்தில் நீங்கள் கண்டு மகிழலாம்.
சட்டம் என் கையில்: தமிழில் நடிகர் சதீஷ் கதையின் நாயகனாக நடித்து அண்மையில் வெளியான இப்படத்தை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணலாம். எதிர்பாராத விதமாக நடந்த ஒரு கொலையை மறைக்க முயலும் வகையில் த்ரில்லர் பாணியில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
ஹோம் : மலையாள திரைப்படமான இது, இன்றைய சூழலில் உறவுகள் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளி குறித்து பேசுகிறது. ஃபீல்குட் திரைப்படமான இதனை அமேசான் ப்ரைம் ஓடிடி பார்க்கலாம்.
பஜ்ரங்கி பாய்ஜான்: சல்மான், கரீனா கபூர் ஆகியோர் நடிப்பில் இந்தியில் வெளியான இப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம். பாகிஸ்தான் சிறுமியை, அவளது நாட்டிற்கு அனுப்பும் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக இப்படம் காட்சிப்படுத்தியிருக்கும்.
ஜன கண மன: பேராசிரியை கொலை வழக்கில் பல்வேறு எதிர்பாராத திருப்பங்கள் நிகழ, உண்மையில் அந்தக் கொலையை செய்தது யார் என்ற கேள்வியுடன் இப்படம் பயணிக்கிறது. பிரித்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படத்தை, அமேசான் ப்ரைமில் காணலாம்.
777 சார்லி: நாய்க்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை இப்படம் பேசுகிறது. ரக்ஷித் ஷெட்டி, பாபி சிம்ஹா, ராஜ் பி ஷெட்டி ஆகியோர் நடிப்பில் கன்னடத்தில் ஃபீல் குட் படமாக வெளியான இதனை, அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.