Advertisment
Presenting Partner
Desktop GIF

ஹாரர் படங்களை மக்கள் விரும்பி ரசிப்பது ஏன்? ஆய்வில் தெரியவந்த 6 காரணங்கள்!

பயம் மற்றும் உற்சாகத்தின் உணர்ச்சிகளுக்கு இடையே நிறைய ஒற்றுமை உள்ளது. இரண்டிலும், மன அழுத்த ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Horror Movie

பொதுவாக திரைப்படங்களை விரும்பி பார்ப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட ஜானர் படங்களை அதிகம் விரும்புவார்கள். இதில் ஹாரர் படம் பார்ப்பவர்கள் ஒரு ரகமாக இருப்பார்கள். படத்தை பார்த்தால் பயம் தொற்றிக்கொள்ளும் என்று தெரிந்தாலும், அந்த படங்களை பார்க்க ஆர்வத்துடன் இருப்பார்கள். அந்த வகையில் நீங்கள் ஒரு திகில் பட விரும்பியாக இருந்தால், ஒரு ஹாரர் படம் மூலம் நாம் எப்படி பயப்படுகிறோம் என்பது பற்றி நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம்.

Advertisment

Read In English: 6 reasons why people enjoy horror movies

கோரமான படங்கள், அதிகமான வன்முறை, திடுக்கிடும் பயம் மற்றும் அச்சுறுத்தும் கேரக்டர்கள் ஆகியவை ஒரு திகில் படத்திற்கான பொதுவான கூறுகள். இது ஒரு வகையில் பார்வையாளர்களுக்கு பயம் மற்றும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. பொதுவாக நம் அன்றாட வாழ்வில் இந்த எதிர்மறை உணர்ச்சிகளைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனாலும் ஹாரர் படங்களை விரும்பி பார்க்கும் நபர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஏன் ஹாரர் படங்களில் அவர்களைத் தேடி, ரசிக்கிறார்கள்?

பயம் சிலிர்க்க வைக்கும்

பயம் மற்றும் உற்சாகம் ஆகிய உணர்ச்சிகளுக்கு இடையே நிறைய ஒற்றுமை உள்ளது. இரண்டிலும், மன அழுத்த ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன, அவை அதிகரித்த இதயம் மற்றும் சுவாச விகிதங்கள், வியர்வை மற்றும் தசை பதற்றம் போன்ற உடல் அறிகுறிகளை உருவாக்குகின்றன. படத்தை பார்க்கும்போது எச்சரிக்கையாகவும் தங்கள் பயத்தின் விளம்பில் இருப்பதாகவும் உணர வைக்கிறது. பயம் மற்றும் உற்சாகம் உள்ளிட்ட தீவிர உணர்ச்சி அனுபவங்களை விரும்பும் ஆளுமை கொண்டவர்கள், திகில் திரைப்படங்களை ரசிக்க விரும்புகிறார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது.

ஆனால் மிகவும் பயப்படுபவர்களுக்கு, பயம் மற்றும் வன்முறை காட்சிகள் மிகவும் தீவிரமாக இருந்தால், அந்த காட்சிகளை பார்க்காமல், விலகி இருப்பது அல்லது, அந்த மாதிரியாக காட்சிகள் வரும்போது, காதுகளுக்கு மேல் கை வைத்து அதில் இருந்து வெளியில் வருவது போன்ற நடத்தைகளை வைத்து சமாளித்துக்கொள்வார்கள். ஆனாலும் அவர்கள் தீவிர உணர்ச்சிகளை அனுபவிக்க நேர்ந்தால், அவர்கள் இந்த அனுபவத்தில் இருந்து சிலிர்ப்பை இன்னும் அனுபவிக்கலாம்.

நிம்மதி உணர்வு இருக்கிறது

படத்தில் ஹாரர் காட்சிகள் கடந்த பிறகு, ஏற்படும் நிம்மதியான உணர்வின் காரணமாக மக்கள் திகில் திரைப்படங்களை ரசிக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள். ஒரு ஹாரர் திரைப்படத்தைப் பார்ப்பது ஒரு உணர்ச்சிகரமான ரோலர்கோஸ்டராக இருக்கலாம், படத்தின் போக்கில் பயம் மற்றும் நிம்மதியின் தனித்துவமான தன்மைகள் இருக்கும். எடுத்துக்காட்டாக, 2017-ல் வெளியான இட் திரைப்படத்தில் முக்கியக் ஹீரோ ஒரு பேய் கோமாளியுடன் பயங்கரமான சந்திப்புகளில் இருந்து தப்பிக்கிறார்கள். இதில் பயமுறுத்தும் தருணங்கள் அமைதியான காட்சிகளால் பிரிக்கப்படுவதால், இது உணர்ச்சிகளின் அலையை தூண்டுகிறது. 1975 ஆம் ஆண்டில் வெளியான கிளாசிக் திரைப்படமான ஜாவ்ஸ் (Jaws) திரைப்படத்தில், பார்வையாளர்கள் பயமுறுத்தும் தருணங்கள் கடந்து நிம்மதி பெற்றாலும், ஹாரர் காட்சிகள் பார்த்து, மீண்டும் மீண்டும் பயப்படுவார்கள்.

நோய் தொற்று தாக்கம் இருக்குமோ என்ற சந்தேகத்தை தீர்க்கும்

பல ஹாரர் திரைப்படங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட தீம்கள் மற்றும் ஜோம்பிஸ், ஓநாய்கள் மற்றும் காட்டேரிகள் போன்ற கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளன. எனவே ஹாரர் திரைப்படங்கள் ஒரு நோயுற்ற தன்மை இருக்குமோ என்ற ஆர்வத்தைத் தணிக்க உதவும். வன்முறை, மரணம், அழிவு மற்றும் கோரமான கூறுகள் உண்மையான உலகில் பாதுகாப்பாக இல்லாத (அல்லது சமூக ரீதியாக பொருத்தமான) விஷயங்களை ஆராய ஆர்வமுள்ளவர்களுக்கு பாதுகாப்பான இடத்தை வழங்க முடியும்.

நாம் நமது வரம்புகளை உருவாக்க முடியும்

ஹாரர் திரைப்படங்கள் நமது மனதின் ஆழ்ந்த அச்சங்களை பிரதிபலிக்கும் பயம் மற்றும் வெறுப்பின் தனிப்பட்ட எல்லைகள் பற்றிய சுயபரிசோதனையை உடனடியாக வெளிப்படுத்தும். எனவே சிலர் தங்களுடைய சொந்த வரம்புகளைப் பற்றி நன்கு புரிந்துகொள்ள ஹாரர் படங்களை பார்த்து மகிழ்வார்கள். ஹாரர் காட்சிகளை பார்ப்பது தனிப்பட்ட எல்லைகளை உருவாக்குவதற்கு ஒரு வழியாகும். இது குறித்து எங்களில் ஒருவர் கால்டன் நடத்திய ஆய்வில், ஹாரர் திரைப்பட ரசிகர்கள், ஹாரர் திரைப்பட ரசிகராக இல்லாதவர்களுடன் காணாதவர்களுடன் ஒப்பிடும்போது, கோவிட் தொற்றுநோயின் ஆரம்ப மாதங்களில் குறைவான உளவியல் துயரங்களைப் சந்தித்ததாக தெரியவந்துள்ளது.

சமூகமாக இருக்கலாம்

மற்றவர்களுடன் சேர்ந்து ஹாரர் திரைப்படங்களைப் பார்ப்பது சிலருக்கு பாதுகாப்பாக உணர உதவும். மாற்றாக, இது அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் உணர்ச்சிகளை ஊட்டுவதன் மூலம் உணர்ச்சி அனுபவத்தைப் பெருக்க உதவும். பொதுவாக ஹாரர் திரைப்படங்கள் இரவு நேரத்தில் பார்க்க சிறந்த தேர்வாக இருக்கிறது. அதிலும் நண்பர்களுடன் இணைந்து பார்க்கும்போது ஒன்றாக பயப்படுவது ஒருவரையொருவர் அரவணைக்கவும் ஆறுதலடையவும் ஒரு நல்ல காரணத்தை அளிக்கிறது.

பிறர் துன்பத்தில் நமக்கு கிடைக்கும் இன்பம்

ஹாரர் திரைப்படங்கள் சாசாடிஃபியூடு (schadenfreude) எனப்படும் மற்றவர்களின் துரதிர்ஷ்டத்தைப் பார்க்கும் போது நாம் உணரும் மகிழ்ச்சியான உணர்ச்சியை குறிக்கிறது. துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் நபருக்கு இது தேவைதான் என்று நாம் உணரும்போது இது நிகழ்கிறது. பல ஹாரர் திரைப்படங்களில் பயங்கரமான விதியை அனுபவிக்கும் கேரக்டர்கள் மற்றும் அவர்களின் துணை கேரக்டர்கள் இந்த மாதிரியான துன்பத்தை அனுவிக்கும். பெரும்பாலான நேரங்களில் இந்த துரதிர்ஷ்டவசமான ஆன்மாக்கள் விரும்பத்தகாதவர்களாக உருவாக்கப்பட்டு, அவர்களின் கொடூரமான முடிவுக்கு முன் முட்டாள்தனமான தேர்வுகளை அடிக்கடி செய்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, 1996 ஆம் ஆண்டு டீன் ஏஜ் சூனியக்காரி திரைப்படமான தி கிராஃப்டில், கிறிஸ் ஹூக்கர் என்ற கேரக்டர் பெண்களுக்குக் கொடுமையானவராக சித்தரிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர் ஜன்னலுக்கு வெளியே வெடித்து இறந்துவிடுவார். ஹாரர் திரைப்படங்களின் கொடூரமான தன்மை இருந்தபோதிலும், இது குறித்து ஆய்வில், ஹாரர் ரசிகர்கள் மற்றவர்களைப் போலவே பச்சாதாபத்தையும் கொண்டுள்ளனர்.

இதையெல்லாம் என்ன செய்வது?

ஹாரர் திரைப்படங்கள் நம்பிக்கையின் பாதுகாப்பின் மூலம் நமது ஆழ்ந்த அச்சங்களை எதிர்கொள்ள அனுமதிக்கின்றன. பல்வேறு காரணங்களுக்காக அவற்றை அனுபவிக்கிறார்கள். குறிப்பிட்ட திரைப்படம் மற்றும் அதைப் பார்க்கும் நபர் அல்லது நபர்களைப் பொறுத்து அவர்களின் காரணங்களும் வேறுபடுகிறது. இருப்பினும், திகில் திரைப்படங்கள் பிரபலமாவது அதிகரித்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment