63-வது ஃபிலிம்ஃபேர் விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று (சனிக்கிழமை) மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினர்.
ஃபிலிம்ஃபேர் விருது பெற்ற பாலிவுட் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் முழு பட்டியல் இதோ:
சிறந்த திரைப்படம்: ஹிந்தி மீடியம்
சிறந்த நடிகை: வித்யா பாலன் (தும்ஹரி சுலு)
சிறந்த நடிகர்: இர்ஃபான் கான் (ஹிந்தி மீடியம்)
சிறந்த அறிமுக இயக்குநர்: கொங்கனா சென் ஷர்மா எ டெத் இன் தி குஞ்ச்)
சிறந்த துணை நடிகர்: ராஜ்குமார் ராவ் (பாரொலி கி பர்ஃபி)
சிறந்த துணை நடிகை: மேஹர் விஜ் (சீக்ரெட் சூப்பர்ஸ்டார்)
சிறந்த வசனகர்த்தா: ஹிதேஷ் கேவால்யா (சுப் மங்கல் சாவ்தன்)
சிறந்த திரைக்கதை: சுபாஷிஷ் பூத்தியானி (முக்தி பவன்)
சிறந்த கதை: அமித் மசூர்க்கர் (நியூட்டன்)
குறும்படத்திற்கான சிறந்த நடிகர்: ஜாக்கி ஷெராஃப் (குஜ்லி)
குறும்படத்திற்கான சிறந்த நடிகை: ஷெஃபாலி ஷா (ஜூஸ்)
சிறந்த பாடகர்: அர்ஜித் சிங் (ரோக் நா ரூக் நைனா - பத்ரிநாத் கி துல்ஹனியா)
சிறந்த பாடகி: (உல்லு கா பத்தா - ஜக்கா ஜசூஸ்)
வாழ்நாள் சாதனையாளர் விருது - மாலா சின்ஹா மற்றும் பப்பி லஹிரி
சிறந்த இசையமைப்பாளர் - ப்ரீதம் (ஜக்கா ஜசூஸ்)
சிறந்த ஒளிப்பதிவாளர்: சிர்ஷா ரே (எ டெத் இன் தி குஞ்ச்)
இந்த விழாவில், உலக அழகி மனுஷி சில்லார், பாலிவுட் நடிகைகள் கஜோல், சோனம் கபூர், கொங்கனா சென் ஷர்மா, ராகுல் ப்ரீத், மாதுரி தீக்ஷித், ரேகா ஆகியோர் அழகிய ஆடைகள் அணிந்து கலந்துகொண்டனர்.