தமிழகத்தில் தேர்தல் திருவிழா ஆரவாரமாக நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் இதைத் தொடர்ந்து, விஜய் டிவியின் 6ம் ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சி ஏப்ரல் 11ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவி திறமையாளர்களைக் கண்டெடுத்து, அவர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களை பிரபலங்களாக ஜொலிக்க வைத்து வருகிறது. அதோடு, திறமையானவர்களையும் அவர்களின் படைப்புகளையும் கௌரவிக்கும் விதமாக விருதுகளையும் வழங்கி வருகிறது.
விஜய் டிவியின் விருது வழங்கும் விழாவுக்கு எப்போதும் ரசிகர்கள் மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் இடையே பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் சினிமா நட்சத்திரங்கள், டிவி நட்சத்திரங்கள், பலரும் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு விஜய் டிவியின் 6ம் ஆண்டு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக இருக்கும். விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 11ம் தேதி ஒளிபரபாக உள்ளது.
6ம் ஆண்டு விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சியின் முன்னோட்டமாக, விஜய் டிவியின் தீவிர ரசிகர்களை கௌரவிக்கும் விதமாக 4 முன்னோட்ட நிகழ்ச்சிகளுடன் விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 11ம் தேதி ஒளிபரப்பபடுகிறது.
விஜய் டிவியின் 6வது ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னர், முன்னர், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலிலும் விஜய் டிவியில் ஒளிபரப்புவதற்கு சிறப்பு நிகழ்சிகள் தயாராக இருக்கிறது. முதல் நிகழ்ச்சி மார்ச் 14ம் தேதி பரிவட்டம் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. மார்ச் 21ம் தேதி எங்க வீட்டு மகாலட்சுமி நிகழ்ச்சியும் மார்ச் 28ம் தேதி எங்க ஏரியா உள்ள வராதே நிகழ்ச்சியும் ஏப்ரல் 04ம் தேதி வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சியும் ஏப்ரல் 11ம் தேதி 6வது ஆண்டு விஜய் டிவி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒளிபராப்பாக உள்ளது.
6வது ஆண்டு விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சி பரிவட்டம்:
6வது ஆண்டு விஜய் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சி பரிவட்டம் நிகழ்ச்சி வருகிற ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் மிகவும் பிரபலமான 4 சீரியல் குடும்பங்களில் எந்த குடும்பம் சிறந்தது என்பதை தீர்மானிக்க பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி, பாரதி கண்ணம்மா சிரியல் குடும்பஞ்கள் இடையே நடிப்பு மற்றும் டாஸ்க்குகள் மூலம் ஒருவருக்கொருவர் போட்டியிடுவார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ‘பரிவட்டம்’ மரியாதை கிடைக்கும்.
எங்க வீட்டு மகாலட்சுமி நிகழ்ச்சி
எங்க வீட்டு மகாலட்சுமி மார்ச் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒளிபரப்பாகிறது. இது ஒரு பொழுதுபோக்கு பெண்கள் விருந்து நிகழ்ச்சி. சீரியல்களில் உள்ள அழுத்தம் மற்றும் சிக்கல்களில் இருந்து விடுபட அனைத்து பெண்களும் ஒரு விருந்துக்கு கற்பனை கதாபாத்திரங்களாக கூடிவருகிறார்கள்.
எங்க ஏரியா உள்ள வராதே நிகழ்ச்சி
எங்க ஏரியா உள்ள வராதே நிகழ்ச்சி விஜய் டிவியில் மார்ச் 28ம் தேதி பிற்பகலில் ஒளிபரப்பாகிறது. இது விஜய் டிவியில் பிரபலமான சீரியல் குடும்ப உறுப்பினர்கள் இடையே நடிப்பு மற்றும் டாஸ்க்குகள் மூலம் ஒரு பொழுதுபோக்கு போட்டி நிகழ்சி ஆகும். இதில் ஒவ்வொரு குடும்பமும் முக்கிய நிகழ்வில் அதிகபட்ச விருதுகளை வெல்வோம் என்று கூறுகிறார்கள்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சி
வருத்தப்படாத வாலிபர் சங்கம் நிகழ்ச்சி ஏப்ரல் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் ஒளிபரப்பாகிறது. விஜய் டிவி விருதுகள் திருவிழா பாட்டு நடனம் என்று பிரம்மாண்டமாக துவங்குகிறது. அனைத்து ரியாலிட்டி நிகழ்ச்சி குழுவினரும் பல்வேறு புதுமையான நிகழ்ச்சிகளின் மூலம் ஒரு பண்டிகை மனநிலை கொண்டாட்டத்தை உருவாக்க உள்ளனர்.
விஜய் டிவியின் 6வது ஆண்டு விருது வழங்கும் விழா
விஜய் டிவியின் 6வது ஆண்டு விருது வழங்கும் விழா ஏப்ரல் 11ம் தேதி பிற்பகல் ஒளிபரப்பாகிறது. 30 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி கலர்ஃபுல்லான டான்ஸ், இசை, நடிப்பு, நகைச்சுவை ஆகிய உணர்சிகரமான தருணங்களுடன் 6 மணி நேரம் நடைபெறுகிறது. விஜய் டிவியின் 6வது ஆண்டு விருது வழங்கும் நிகழ்ச்சியை டிடியும் ம.க.ப ஆனந்த்தும் தொகுத்து வழங்குகிறார்கள்.
விஜய் டிவி விருதுகள், சிறந்த ஹீரோ, சிறந்த ஹீரோயின், சிறந்த தாய் நடிகை, சிறந்த தந்தை நடிகர், சிறந்த மாமியார், சிறந்த மருமகள் நடிகை, சிறந்த மகன் நடிகர், சிறந்த மகள் நடிகை, சிறந்த சீரியல், பிடித்த குடும்பம், சிறந்த துணை நடிகர் ஆண், சிறந்த துணை நடிகர் பெண், சிறந்த நகைச்சுவை சீரியல், சிறந்த வில்லன் நடிகர், திரையில் பிடித்த ஜோடி உள்ளிட்ட 30 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது.
தேர்தல் திருவிழா ஆரவாரமாக நடந்துகொண்டிருக்கும் வேலையில் விஜய் டிவியின் 6வது ஆண்டு விருது வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதற்கு முன்னோட்டமாக பரிவட்டம் நிகழ்ச்சி மார்ச் 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. பரிவட்டம் நிகழ்ச்யின் புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. விஜய் டிவி விருது வழங்கும் திருவிழாவைக் காண ரசிகர்கள் தயாராக இருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.