Advertisment
Presenting Partner
Desktop GIF

70th National Film Awards: விருதுகளை குவித்த பொன்னியின் செல்வன் - 1, திருச்சிற்றம்பலம்!

70th National Film Awards Announcement: தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ (Ponniyin selvan 1) படத்திற்கு சிறந்த தமிழ் மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ponniyin Selvan 1 - review highlights: 'பொன்னியின்  செல்வன்' தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டிய சரித்திர கதை - ரசிகர்கள்

தமிழின் உச்சநட்சத்திரமாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

70th National Award Winners List 2024: மத்திய‌ அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி வருகிறது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டு பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு புஷ்பா, கங்குபாய் ஆகிய படங்கள் தேசிய விருதுகள் பெற்றன.

Advertisment

இந்நிலையில், 70-வது தேசிய திரைப்பட விருது இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த முறை 2022 ஆம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஆங்கிலத்தில் படிக்கவும்: 70th National Film Awards 2024 Announcement Live Updates

இந்த நிலையில், தமிழில் முன்னணி இயக்குநராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ (Ponniyin selvan 1) படத்திற்கு சிறந்த தமிழ் மொழி திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏ.ஆர். ரகுமானுக்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழின் உச்சநட்சத்திரமாக வலம் வரும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மேகம் கருக்காதா’ பாடலுக்கு சிறந்த நடனத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டருக்கு சிறந்த நடன இயக்குநர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

70வது தேசிய திரைப்பட விருதுகள் 2024: வெற்றியாளர்கள் பட்டியல்: 

சிறந்த தமிழ் திரைப்படம் - பொன்னியின் செல்வன் 1

சிறந்த கன்னட திரைப்படம் - கே.ஜி.எப் 2

சிறந்த மலையாள திரைப்படம் - சவுதி வெள்ளைக்கா

சிறந்த நடிகை - நித்யா மேனன் (திருச்சிற்றம்பலம்)

சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான் (பொன்னியின் செல்வன் 1)

சிறந்த நடனம் - ஜானி மாஸ்டர் (திருச்சிற்றம்பலம்)

சிறந்த நடிகர் - ரிஷப் ஷெட்டி (காந்தாரா)

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் - காந்தாரா

சிறந்த தெலுங்கு திரைப்படம் - கார்த்திகேயா 2

சிறந்த ஒலி அமைப்பு - ஏ.ஆர். ரஹ்மான் (பொன்னியின் செல்வன்)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அன்பறிவ் (காந்தாரா)

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Entertainment News Tamil National Award
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment