scorecardresearch

இன்ஸ்டா ரீல்சில் ஜமாய்க்கும் 75 வயது பாட்டி: பேரனுடன் இணைந்து ஆட்டம்- பாட்டம்

திறமையை வெளிப்படுத்த வயது ஒரு தடையில்லை என்ற கருத்தை ஆழமாக பதித்துள்ளார் ராஜாமணி பாட்டி.

இன்ஸ்டா ரீல்சில் ஜமாய்க்கும் 75 வயது பாட்டி: பேரனுடன் இணைந்து ஆட்டம்- பாட்டம்

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் மாறி வரும் சூழலில் பலரும் தங்களை எப்படி பிரபலப்படுத்திக்கொள்வது என்பதை தேடி அலைந்துகொண்டிருக்கின்றனர். இப்படி இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது தான் சமூகவலைதளங்கள். போட்டோ எடுத்தால் ஆயுஸ் குறைந்துவிடும் என்ற நிலை மாறி தற்போது தன்னை தானே அழகாக காண்பிக்க செல்பி எடுக்கும் காலம் வந்துவிட்டது.

மேலும் சமூக வலைதளங்களின் மூலம் பலரும் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி வருகினறனர். இதை வைத்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் என பலர் சினிமா மற்றும் சின்னத்திரையில் தங்களுக்கான வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். அதேபோல் தங்கள் வாலிபத்துடன் இருக்கும்போது இருந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள சில முதியவர்களும் தங்களது திறமைகளை வீடியோ மூலம் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது 75 வயதாகும் ராஜாமணி என்ற பாட்டி தனது 26 வயது பேரனுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் வீடியோ பதிவுகள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதனால் தௌஃபிக் 24 என்ற அந்த இன்ஸ்டாகிராம் ஐடியை கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கு அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர்.

இவர்கள் இருவரும் இணைந்து வெளியிடும் இன்ஸ்’டா ரீல்ஸ்களில் ராஜாமணி பாட்டி இந்த படத்தில் இருந்து எந்த நாயகியின் கேரக்டரில் செய்கிறாரோ அதே போல் உடை மேக்கப் போட்டுக்கொண்டு அசல் இந்த படத்தில் ஹீரோயின் தோற்றத்திற்கே மாறிவிடுகிறார். மேலும் இந்த மேக்கப் மற்றும் உடைகளை தேர்வு செய்வது ராஜாமணி பாட்டியின் மகள். தௌஃபிக்கின் அம்மாதான்.

இன்ஸ்டாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தியுள்ள ராஜாமணி பாட்டியின் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில். வீடியோக்கள் மூலம் எண்டர்டெயின்மெண்ட் செய்யும் பாட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர். ராஜா மணி பாட்டி இளம்பருவத்தில் இருக்கும்போது, இதுபோன்ற சமூகவலைதளங்களின் பயன்பாடு அதிகம் இல்லை.

அதனால் தனக்குள் இருந்த திறமையை வெளிகாட்டாமல் இருந்த நிலையில். இன்றைய காலட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், திறமையை வெளிப்படுத்த வயது ஒரு தடையில்லை என்ற கருத்தை ஆழமாக பதித்துள்ளார் ராஜாமணி பாட்டி. தற்போது இன்ஸ்டாவில் கலக்கி வரும் பாட்டி.  30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: 75 years old grandma viral on instagram r eels video with her grandson