Advertisment

வரலாற்றை மாற்றி எழுதிய தருணம்.. டிரெண்டாகும் 83 படத்தின் ட்ரெய்லர்!

இந்த திரைப்படம் டிசம்பர் 24ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 3D-யிலும் வெளியாவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
வரலாற்றை மாற்றி எழுதிய தருணம்.. டிரெண்டாகும் 83 படத்தின் ட்ரெய்லர்!

1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள 83 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் டிசம்பர் 24ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 3D-யிலும் வெளியாவதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisment

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் 1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி இந்திய அணிக்கு வரலாற்றில் முக்கியமான நாளாகும். பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, இறுதிப் போட்டியில் சந்தித்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, அபாராமாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன், முதல் முறையாக உலகக்கோப்பையையும் கைப்பற்றி வரலாறு படைத்தது.

இப்படத்தின் ட்ரெய்லரை பார்கையில், தொடரின் பாதி வரை பின்தங்கியிருந்த இந்திய அணி வேகமெடுத்து பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்ற தருணம் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

இயக்குநர் கபீர்கான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கபில்தேவ்வாக ரன்வீர் சிங், தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக நடிகர் ஜீவா, மான் சிங் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்தவர்கள்போல் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் முதலில் 2020 இல் வெளியிட திட்டமிடப்பட்டது ஆனால் கோவிட் -19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட இயக்குநர் ஹன்சல் மேத்தா, உலகக் கோப்பை வெற்றி இன்னுமும் அவ்வளவு பெருமையை தருகிறது. இந்த ட்ரெய்லர் இப்போது படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது. நடிகர்களை தெளிவான தேர்ந்தெடுத்துள்ளனர். சூப்பர் கபீர்கான் என பதிவிட்டிருந்தார்.

பல திரைப்பிரபலங்களும், கிரிக்கெட் ரசிகர்களும் ட்ரெய்லரை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்த டிரெயலர் படத்தின் மீதான எதிர்ப்பார்பை அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kapil Dev Ranveer Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment