Advertisment

Tamilrockers : ஓவியாவின் 90எம்.எல். படம் தமிழ்ராக்கர்ஸில் லீக்

Tamilrockers Leaked Oviya Helen Starrer 90ML Movie Online : ஓவியா நடிப்பில் வெளியான 90 எம்.எல் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையம் லீக் செய்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
90ML Movie in Tamilrockers

90ML Movie in Tamilrockers

Tamilrockers Leaked 90ML Movile Online for Free Download : நடிகை ஓவியா நடிப்பில் கடந்த மார்ச் 1ம் தேதி வெளியான 90 எம்.எல். திரைப்படம் இணையத்தளம் லீக்கை தாண்டியும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

Advertisment

நடிகை ஓவியா நடிப்பில் ‘ஏ’ சான்றிதழ் பெற்று வெளியான 90 எம்.எல் படத்தை தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது. இந்த படத்தில் வரும் வசனங்கள் மற்றும் காட்சிகள் மக்கள் மனதில் பெரிய அளவில் சலிப்பினையும் முகசுழிப்பினையும் உருவாக்கியுள்ளது.

தமிழ் திரையுலகில் களவாணி, கலகலப்பு போன்ற படங்களில் நடித்தவர் ஓவியா. பின் வரும் நாட்களில் பெரிதாக மக்களை கவரும் கதாபாத்திரங்களில் இவர் நடிக்கவில்லை என்றாலும், பிக் பாஸ் மூலம் லட்சக்கணக்கானோர் மனதை வென்றவர். இவருக்காக ஒரு தனி ஆர்மி, ரசிகர்கள் கூட்டம் என அனைத்தையும் சம்பாதித்தார். களவாணி 2 மற்றும் காஞ்சனா 3 ஆகிய படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

90ML Movie in Tamilrockers : 90எம்.எல். படம் லீக்

நடிகர் சிம்பு இசையமைப்பில், அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள 90எம்.எல் படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியாவது. இந்த படத்திற்கு பெரிதாக பொதுமக்கள் வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், ஓவியா ரசிகர்கள் இப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

90ML Movie in Tamilrockers

இந்நிலையில் இந்த படத்தினை சட்ட விரோதமாக லீக் செய்தது தமிழ்ராக்கர்ஸ். ஏற்கனவே பொதுமக்கள் தேர்வு இந்த படத்திற்கு நேற்று அதிகமாக இல்லாத காரணத்தால், வார இறுதியான இன்றும் நாளையும் நிச்சயம் கூட்டம் சேரும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் இந்த நேரத்தில் இப்படம் லீக் செய்யப்பட்டது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : சர்ச்சையை கிளப்பிய 90 எம்.எல். ட்ரெய்லெர்

வழக்கமாக ஒரு படம் இணையத்தில் லீக் ஆன பிறகு அப்படத்திற்கு வரவேண்டிய அதிகபடியான வசூல் தொகை குறைந்துவிடும். காரணம், மக்கள் இணையத்திலேயே பார்த்துவிடுவார்கள். ஆனால் இந்த படத்தை இளைஞர்கள் தியேட்டருக்கு சென்று பார்த்து வருகிறார்கள். எனவே லீக் ஆன போதிலும் இப்படம் நல்ல வசூலை திரட்டுவதால் படக்குழுவினருக்கு ஆறுதலாக இருக்கிறது.

Tamil Cinema Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment