Advertisment

தாமதமாகும் 90 எம்.எல் ரிலீஸ்... காரணத்தை சொன்ன ஓவியா

90ML movie release date changed : 90 எம்.எல் ரிலீஸ் தேதியில் மாற்றம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
90 ML movie

actress oviya's 90ML movie release date changed : நடிகை ஓவியா நடிப்பில் ‘ஏ’ சான்றிதழ் பெற்று வெளியாக இருந்த 90எம்.எல் படத்தில் ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம்.

Advertisment

தமிழ் திரையுலகில் களவாணி, கலகலப்பு போன்ற சில கவனக்கக்கூடிய படங்களில் நடித்தவர் ஓவியா. பின் வரும் நாட்களில் பெரிதாக மக்களை கவரும் கதாபாத்திரங்களில் இவர் நடிக்கவில்லை என்றாலும், பிக் பாஸ் மூலம் லட்சக்கணக்கானோர் மனதை வென்றவர். இவருக்காக ஒரு தனி ஆர்மி, ரசிகர்கள் கூட்டம் என அனைத்தையும் சம்பாதித்தார்.

90ML movie release date : 90 எம்.எல். ரிலீஸ் தள்ளிப்போகிறது

சமீபத்தில் வெளியான சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்திலும் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். களவாணி 2 மற்றும் காஞ்சனா 3 ஆகிய படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்திருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு இசையமைப்பில், அனிதா உதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள 90எம்.எல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதன் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை ஓவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில், “சில தொழில்நுட்ப காரணங்களால் 90 எம்.எல். திரைப்படம் மார்ச் 1ம் தேதி வெளியாகும். உற்சாகம் குறையாமல் இருங்கல். மார்ச் 1ம் தேதி காலை 5 மணிக்கு நாம் நிச்சயம் சந்திப்போம். ஆர்.ஜே. பாலாஜி மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

Tamil Cinema Oviya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment