96 படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
96 Movie Release, 96 Movie

96 Movie Release, 96 Movie

96 Movie Release Date : நந்தகோபால் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் 96 படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

96 Movie Release Date : 96 ரிலீஸ் தேதி

த்ரிஷா மற்றும் விஜய் சேதுபதி அவர்கள் படித்த பள்ளிக்கூடத்தில் நடக்கும், முன்னாள் மாணவர் கூட்டத்திற்கு வருகின்றனர். அங்கு இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர்.

அப்போது இருவருக்கு இடையே இருக்கும் பழைய காதலை உணர்த்தும் வகையில் பல காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. வயதானாலும், இருவரும் எவ்வித மாற்றமுமின்றி ஒருவருடன் ஒருவர் நடந்துக்கொள்ளும் விதம் டிரெய்லரில் காட்டப்பட்டது.

Advertisment
Advertisements

தற்போது இப்படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் 96 படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த செய்தியை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

September 2018

முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ காதலே காதலே ’ பாடல் வெளியிடப்பட்ட நாளில் இருந்தே இப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. தற்போது இப்படம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாவதை அடுத்து ரசிகர்களின் ஆர்வம் கூடியுள்ளது.

Vijay Sethupathi Trisha

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: