பேசாத விஜய் சேதுபதி.. கண்ணிலியே நிற்கும் த்ரிஷா.... ’96’ படத்தின் அழகு இவர்கள் தானா!

மிகப்பெரிய ப்ளஸ் என்பது  டீசரிலியே நமக்கு தெரிய வைத்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட   விஜய் சேதுபதி – த்ரிஷா நடிக்கும் 96 படத்தின்  டீசர் வெளியாகி   ரசிகர்களின் அதிகப்படியான லைக்ஸை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக மாறி  மக்கள் செல்வனாக  உயர்ந்து  நிற்கும் விஜய் சேதுபதி முதன் முறையாக ஒரு டீசர்   முழுவதும் பேசாமல்  கெத்து காட்டி இருக்கிறார் என்றால் அது 96 படத்தின் டீசரில்  தான்.    இவரின் பேச்சுக்கும் இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம் என்பது எல்லோருக்கும் தெரியும்.  ஆனால் எப்படி  அவரை பேசவே விடாமல்  இப்படி  அழகாக காட்ட முடிந்தது என்பது இயக்குனர் பிரேம் குமாருக்கு தான் தெரியும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தை ஒளிப்பதிவு செய்த, சி.பிரேம் குமார் 96 படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.

நேற்று காலை  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான உடனே  மாலை வெளியான டீசர் குறித்த எதிர்பார்ப்பு இரட்டிபானது. அந்த எதிர்பார்ப்பை  அப்படியே பூர்த்தி செய்யும் வகையில்  96 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.   முதன் முறையாக  ஜோடி சேர்ந்துள்ள விஜய் சேதுபதி – த்ரிஷா   இருவரும்  படத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் அவர்களுக்கு பின்னால் ஒலிக்கும் பாடம் அவர்கள் பேச விரும்புவதை அப்படியே நமக்கு புரிய வைத்துள்ளது.

மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் த்ரிஷா  இந்த படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் என்பது  டீசரிலியே நமக்கு தெரிய வைத்துள்ளது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும், சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவும் இந்த டீசரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். மொத்தத்தில், விஜய் சேதுபதி- த்ரிஷா கூட்டணியில் வெளியான 96 படத்தின் டீசர் வழக்கம் போல்  எல்லா சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது.

 

 

×Close
×Close