விஜய் சேதுபதி, திரிஷா நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீ மேக் ஜானு படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் தியேட்டர் வாசலிலேயே கதறி அழுத வீடியொ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது.
இயக்குனர் பிரேம் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடித்து கடந்த ஆண்டு வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
96 படம் பள்ளிப்பருவ காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. இந்த படத்தில் கதாநாயகனாக ராம் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், கதாநாயகியாக ஜானு என்ற பாத்திரத்தில் நடிகை திரிஷாவும் நடித்தனர். 90-களில் பள்ளியில் படித்த பலருக்கும் தங்களின் பள்ளிப்பருவ காதலை, ஈர்ப்பை கண்முன்னே கொண்டுவந்ததைப் போல இந்த 96 திரைப்படம் அமைந்திருந்தது. ரசிகர்கள் உணர்வுப் பூர்வமாக தங்களை இந்த திரைப்படத்துடன் இணைத்துக்கொண்டனர் என்றால் அது மிகையல்ல. அதனால், 96 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெருகிற படங்கள் தமிழில் ரீ மேக் செய்வதும் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெறுகிற படங்கள் தெலுங்கில் ரீ மேக் செய்வதும் என்பது ஒரு சினிமா படைப்பு சார்ந்த பரிவர்த்தனையாக நடந்துவருகிறது.
அந்த வகையில், தமிழில் வெற்றி பெற்ற 96 திரைப்படம் தெலுங்கில் ரீ மேக் செய்யப்பட்டது. தெலுங்கில் ஜானு என்று பெயரிடப்பட்டு தெலுங்கு நடிகர் ஷர்வானந்த் மற்றும் நடிகை சமந்தா நடிப்பில் நேற்று முன் தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
This guy >>>Vijay Sethupathi + Sharwa #Jaanu #96movie pic.twitter.com/qRsyBZxRM0
— Pravi (@P_R_A_Ve_e_n) February 7, 2020
தெலுங்கில் வெளியான ஜானு படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் தியேட்டர் வாசலில் கண்கலங்கிய வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகிவருகிறது.
அந்த ரசிகர், ஜானு படம் குறித்தும் தன்னை எப்படி அது பாதித்தது என்பது குறித்தும் ஊடகங்களிடம் கூறுகையில், “என் வாழ்க்கையிலும் இப்படி ஒரு காதல் இருந்தது. நான் ஏற்கெனவே தமிழில் இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். இந்த முறை தெலுங்கில் பார்த்தபோது வசனங்கள் நன்றாக புரிந்தது. சமந்தா திரிஷா அளவுக்கு நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்தியுள்ளார். எனக்கும் காதல் தோல்வி இருந்தது. அதனால், நான் அழவில்லை. இந்தப் படம் உண்மையான காதலை சொல்கிறது.” என்று இந்த ரசிகர் சிறுவர்களைப் போல கண்கலங்கி அழுகிறார்.
இந்த வீடியோவைப் பார்த்த சில நெட்டிசன்கள் இவருக்கு ஆதரவாக பேசிவரும் நிலையில், சிலர் இவரை கிண்டல் செய்தும் வருகின்றனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:96 telugu remake jaanu a fan crying at front of theater viral video
‘நடமாடும் நகைக்கடை’ தயாரிக்கும் படத்தில் வனிதா: கதை இதுதானா?
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி : மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகம், புதுச்சேரி சட்டசபை தேர்தல் : பணிக்குழு பட்டியலை அறிவித்த காங்கிரஸ்
வன்னியர்கள் இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு : உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
டாப்-5 சீரியல்களில் மெஜாரிட்டி சன் டிவி பக்கம்: எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
தவறாக மொழிபெயர்த்த ஹெச்.ராஜா… கண்டுபிடித்து திருத்திய அமித் ஷா!