ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்திய நேரப்படி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது.
கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ திரைப்படம் 13 பிரிவுகளில் இடம் பெற்றுள்ளது. இதில் 7 பிரிவுகளில் விருதுகளை குவித்துள்ளது. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத் தொகுப்பு, சிறந்த துணை நடிகர், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவுகளில் ஒப்பன்ஹெய்மர் திரைப்படம் விருதை வென்றுள்ளது.
சிறந்த நடிகராக சிலியன் மர்ஃபி விருதை வென்றார். ஓப்பன்ஹெய்மர் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை ராபர்ட் டௌனி ஜூனியர் பெற்றார். இதே படத்திற்காக சிறந்த இசையமைப்புக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார் லுட்விக் கோரன்சன். இதே படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவு பிரிவில் ஹொய்தே வான் ஹொய்தேமா விருது பெற்றார். சிறந்த படத்தொகுப்புக்கான விருதை பெற்றார் ஜென்னிஃபர் லேம். சிறந்த படமாகவும் ஒப்பன்ஹெய்மர் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முதல் முறையாக சிறந்த இயக்குநர் விருதை பெற்றார் கிறிஸ்டோஃபர் நோலன்.
Poor Things படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார் எம்மா ஸ்டோன். The Holdovers படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார் டாவின் ஜாய் ரண்டோல்ஃப். சிறந்த ஆவணபடத்திற்கான விருதை 20 Days in Mariupol படம் பெற்றது. சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் விருதை Poor Things திரைப்படம் பெற்றது. சிறந்த விஷ்வல் எபக்ட்ஸ் விருதை பெற்றது Mission: Impossible – Dead Reckoning Part One திரைப்படம். சிறந்த பின்னணி இசை பிரிவில் The Zone of Interest படம் விருது பெற்றது. சிறந்த அனிமேஷன் திரைப்படமாக The Boy and the Heron திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருதை Anatomy of a Fall திரைப்படம் பெற்றது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை American Fiction திரைப்படம் பெற்றுள்ளது.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“