A cutest video of dog attending 2019 IIFA Awards: சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் 2019 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை அதிதி பாட்டியா அந்த நிகழ்வில் செய்த ஒரு நேர்காணல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.
மும்பையில் கடந்த புதன்கிழமை 20வது ஆண்டு சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் 2019 (IIFA) வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பாராமல் வந்த ஒரு விருந்தினரின் நேர்காணல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ளது. அந்த விருந்தினர் வேறு யாரும் அல்ல ஒரு நாய்தான்.
நடிகை அதிதி பாட்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிறிது நேர வீடியோ கிளிப் ஒன்றில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு உள்ளே நுழைந்துவிட்ட ஒரு நாய் அமைதியாக உட்கார்ந்து அதிதி பாட்டியா கேட்பதை கவனமாக கேட்கிறது. அவர் அந்த நாயிடம் நேர்காணல் செய்கிறார். இந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. அது ஆறு லட்சம் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. மேலும், அதிதி பாட்டியா நட்புடன் எல்லாவற்றிலும் அழகானவர் என்று அந்த நாயை அறிமுகப்படுத்தி பின்னர் அதனிடம் கேள்வி கேட்கிறார்.
இந்த வீடியோவில் அதிதி பாட்டியா “ஹலோ சார்! ஹவ் ஆர் யு?” என்று அந்த நாயிடம் கேட்கிறார். அந்த நாய் மிகவும் சமர்த்தாக அதிதிக்கு தனது கால்களை நீட்டி நட்பைத் தெரிவிக்கிறது. அதிதி இந்த நிகழ்வைப் பற்றி நாயிடம் கேட்பதுபோல பேசிக்கொண்டிருக்கும்போது அது வீடியோ முழுவதும் மிகவும் அமைதியாகவே இருக்கிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் பலரையும் அது வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்தவர்களில் ஒருவர் அந்த நாய் மிகவும் லக்கி டாக் என்றும் மற்றொருவர் ரொம்ப அழகானது என்றும் கம்மெண்ட் செய்துள்ளார்கள். அதிதி பாட்டியா பதிவிட்ட இந்த வீடியோ மூலம் 20வது சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் 2019 அளவுக்கு இந்த சமர்த்தான நாயும் சமூக ஊடகங்களில் வரைல் ஆகி உள்ளது.