A French mini Musical play to be staged at the Alliance Francaise: சென்னையில் உள்ள அலைன்ஸ் பிரான்ஸிஸில் அக்டோபர் 19 ஆம் தேதி பிரெஞ்சு கலாச்சார நிறுவனத்தின் மாணவர்கள் நிகழ்த்தும் ‘லெஸ் சின்க் டிட்ஸ் டெஸ் க்ளோன்ஸ் ஆ பிரின்ஸ்’ (Les Cinq Dits des Clowns au Prince) இளவரசருக்கு ஐந்து கோமாளிகள் என்ற ஒரு பிரெஞ்சு மினி இசை நாடகம் நடைபெற உள்ளது.
இந்த நாடகம் பிரெஞ்சு நாடகம் இயக்குனரும் நடிகருமான ஆர்.அமரேந்திரன் இயக்கியுள்ளார். இவர் ஆஸ்கார் விருதுகளை வென்ற ‘லைஃப் ஆஃப் பை’ படத்திலும் தமிழில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்திலும் நடித்துள்ளார்.
ஜீன்-பால் அலெக்ரே எழுதிய இந்த நாடகம் மிகவும் நகைச்சுவை உணர்வுடன் நெருக்கடியில் இருக்கும் ஒரு நாட்டின் பிரச்னைகளையும் அங்கே கலாச்சாரம் பட்ஜெட் கட்டுப்பாடுகளால் அச்சுறுத்தப்படுவதையும் பேசுகிறது.
இதில் முக்கிய காதாபாத்திரங்கள் இரண்டு கோமாளிகள். அவர்கள் மன்னரால் இறுதி எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள். மன்னரின் ராஜ்ஜியத்திலிருந்து கலைகளை வெளியேற்றக் கூடாது என்று அவர்கள் விரும்பினால், அவர்கள் ஒரு நாடகத்தை இயற்ற வேண்டும். அது அவரை சிரிக்கவும் அழவும் செய்யும்.” என்கிறார் இயக்குனர் அமரேந்திரன்.
நாடகத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லோரும் பிரெஞ்சு மாணவர்கள் என்றும் அவர்கள் ஒரு பிரெஞ்சு நாடகத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை என்றும் நாடக இயக்குனர் அமரேந்திரன் கூறினார். அதே நேரத்தில் இந்த நாடகத்தில் பிரெஞ்சு பாடல்களும் இடம்பெறுகின்றன.
இந்த நாடக நிகழ்வு பற்றி அலையன்ஸ் பிரான்ஸிஸின் இயக்குனர் புருனோ பிளாஸ் கூறுகையில், சென்னையில் இத்தனை ஆண்டுகளில் நடிகர்கள் பிரெஞ்சு மொழியில் ஒரு நாடகத்தை நடிக்க முயற்சிப்பது அநேகமாக இதுவே முதல்முறை. இந்த வார இறுதி தவிர, நாங்கள் இந்த நாடகத்தை பிரெஞ்சு ஆசிரியர்களின் சரவதேச தினத்தை நினைவுகூரும் விதமாக நவம்பர் 28 ஆம் தேதி அன்றும் அரங்கேற்ற திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
‘லெஸ் சின்க் டிட்ஸ் டெஸ் க்ளோன்ஸ் ஆ பிரின்ஸ்’ என்ற இந்த பிரெஞ்சு நாடகம், சென்னை அலைன்ஸ் பிரான்ஸிஸில் அக்டோபர் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அரங்கேற்றப்படும். நாடகம் பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.