லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் நேற்று வெளியானது.
Advertisment
கோலமாவு கோகிலா
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நயந்தாரா, யோகிபாபு, ஜேக்கலின் மற்றும் சரண்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’ இந்தத் திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இதற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் பாடல்கள் அனைத்தும் நேற்று வெளியானது.
Advertisment
Advertisement
மாலை 5 மணியளவில் பாடல்கள் வெளியான நிலையில், இரவு 7 மணிக்குப் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. நயன்தாரா நடித்த படத்தின் டிரெய்லரை கோடிக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.
டிரெய்லர் வெளியான உடனே பொதுமக்களிடையே பல கேள்விகள் எழுந்துள்ளது. முதலில் ‘பாய்... பாய்... பாய்’ என்று அடுத்தடுத்து தொலைப்பேசியில் உரையாட இறுதியான மொட்டை ராஜேந்திரன் ‘என்ன பாய், நாளைக்கு மட்டும் சரக்கு வரல நீ பாய் இல்ல கர்ள்’ என்கிறார். இதிலிருந்தே இந்தப் படம் போதைப் பொருள் கடத்தல் பற்றிய கதையைக் கொண்டுள்ளது என்று தெரிய வருகிறது.
கோலமாவு கோகிலா
இதற்கும் நயன்தாராவுக்கும் என்ன தொடர்பு? ஒரு வேளை இவர்கள் நயன்தாராவிடம் போதைப் பொருட்களை விற்று அதனால் கதாநாயகிக்கும் ஏதேனும் ஆபத்தா என்று நினைத்துக் கொண்டிருக்க, இங்கு தான் கதையில் பெரிய யூ டர்ன் வைத்திருக்கிறார் இயக்குநர். படத்தின் வில்லன் ‘போலீசை தாண்டி தமிழ்நாட்டில் என் சரக்கை தொட்டவன் யாரு டா?’ என்று கேட்க, பக்கா மாசாக எண்ட்ரி தருகிறார் நயன். ‘எப்படியாவது அந்த 100 கிலோவைக் கொண்டு சேர்க்க உதவி செய்’ என்று தெய்வத்திடம் சரண்யா வேண்டிக்கொள்ள, பல நாடுகளைக் கடந்து வரும் கடத்தல் பொருள் பற்றி படத்தில் நயன்தாராவின் தங்கை ஜேக்லின் யோகி பாபுவிடம் கூறுகிறார். இதன் மூலம் நயன்தாரா, அவருடைய தாய் சரண்யா மற்றும் தங்கை ஜேக்லின் ஆகியோர் போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது.
கோலமாவு கோகிலா படத்தில் ஜேக்லின்
விறுவிறுப்பாகக் கடந்து செல்லும் இந்த டிரெய்லரின் இறுதியில், எதையோ பார்த்து அலறியது போல ‘அக்கா பாவம் அக்காக்கு இரத்தம்’ என்று அழுதபடி எதோ ஒரு இடத்தை விட்டு வெளியே வருகிறார் ஜேக்லின். இதன் மூலம் படத்தில் முக்கிய டுவிஸ்ட் எதோ ஒன்றை இயக்குநர் வைத்துள்ளார். டிரெய்லரில் இருப்பது போல நயன்தாராவை யாராவது தாக்குகிறார்களா அல்லது இது போல ஏதேனும் நாடகம் ஆடி எதிரியைக் கவிழ்க்கும் திட்டத்தில் இருக்கிறார்களா என்பது தான் டுவிஸ்ட்.