விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்து வந்த நடிகை திவ்யா கிருஷ்ணனை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபாலோ செய்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் விஜய் டிவி சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யா கிருஷ்ணன்.
இந்த படம் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான முத்து படத்தின் சின்னத்திரை வெர்ஷன் என்று கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் சீரியலின் விறுவிறுப்பான திரைக்கதை அதிகமான ரசிகர்களை பெற்று தந்தது. பரபரப்பான இந்த சீரியலில் கனகா என்ற வில்லி ரோலில் நடித்து புகழ் பெற்றவர் திவ்யா கிருஷ்ணன்.
சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளரான சின்னத்திரையில் அறிமுகமான திவ்யா தற்போது சீரியலில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் திவ்யா தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் இவர் வெளியிட்டு வரும் ரீல்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருவது வழக்கமான ஒன்று.
புகைப்படம் வீடியோ மற்றும் ரீல்ஸ், மட்டுமல்லாமல் தமிழிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திவ்யா, தினம் ஒரு திருக்குறள் என்ற தலைப்பில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் இந்த வீடியோக்கள் பொதுவாக ரசிகர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனால் குழந்தைகள் மத்தியிலும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை குவித்துள்ள திவ்யா கிருஷ்ணனுக்கு தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். திவ்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏ.ஆர்.ரஹ்மான் ஃபாலோ செய்கிறார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமையோடு பகிர்ந்துள்ள திவ்யா கிருஷ்ணன், இதற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil