/tamil-ie/media/media_files/uploads/2019/02/soundarya-rajinikanth-recption-photos-1.jpg)
soundarya rajinikanth recption photos, சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணம்
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா - தொழிலதிபர் விசாகன் ஆகியோரின் திருமணம் இன்று நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும், ரஜினிகாந்த் சார்பாக அழைப்புன் விடுக்கப்பட்டிருக்கிறது. நாளை லீலா பேலஸ் ஹோட்டலில் திருமண வரவேற்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தி.மு.க தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைக் கட்சிகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரை சமீபத்தில் நேரில் சந்தித்து, தனது மகளின் திருமணத்துக்கு அழைத்தார் ரஜினிகாந்த்.
அதோடு, இன்று கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து, செளந்தர்யாவின் திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளார்.
திருமண வாழ்த்துக்கள் pic.twitter.com/nuY9Nr3ASQ
— A.R.Rahman (@arrahman) 9 February 2019
இந்நிலையில், இசையமைப்பாளரும், ரஜினியின் நண்பரும், செளந்தர்யா முதன் முதலில் இயக்கிய ’கோச்சடையான்’ திரைப்படத்துக்கு இசையமைத்தவருமான, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், அவருடைய சமூக வலைதளத்தில் செளந்தர்யா ரஜினிகாந்தின் வரவேற்பு படத்தினை பதிவிட்டு தனது திருமண வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.