/indian-express-tamil/media/media_files/2025/08/06/tms-vs-vaali-2025-08-06-19-27-35.jpg)
தபால் கார்டில் எழுதி அனுப்பிய பாட்டு; அசத்தலாக பாடிய டி.எம்.எஸ்: வாலியின் இந்த முருகன் பாட்டுக்கு 71 வயது!
தமிழ் திரையுலகில், வளமான சிந்தனையோடும், வாலிபம் நிறைந்த சொற்களோடும், வாழ்நாள் முழுவதும் வண்ணத்திரையில் வசந்தம் வீச வைத்தவர் கவிஞர் வாலி. ஓவியனாய் பயணித்து பின் நாடகத்தை மனம்நாடி, காவிய பாடல்கள் பல தந்து கலையுலகின் உச்சம் தொட்ட வாலி, பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என்ற பன்முகத் தன்மை கொண்டிருந்தார். 1931-ல் அக்.29 அன்று, சீனிவாச அய்யங்கார்-பொன்னம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் ரங்கராஜன்.
ஸ்ரீரங்கத்தில் நண்பர்களுடன் இணைந்து நேதாஜி என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிகையும் நடத்தினார். இதன் மூலம் வானொலி நாடகங்கள் எழுத வாய்ப்பு வந்தது. முருகன் மேல் கொண்ட அன்பால் எழுதிய கற்பனை என்றாலும் பாடலை டிஎம் எஸ்ஸிற்கு அனுப்பி, அவர் அதைப்பாடித் தந்ததோடு, வாலியை திரைவாய்ப்பைத் தேடவும் பணித்தார். தனது முதல் பாடல் வாய்ப்பு குறித்து வசந்த் டிவி நடத்திய நேர்க்காணலில் பங்கேற்று பேசிய கவிஞர் வாலி, அந்த நாட்களில் தபால் கார்டில் எழுதப்பட்டு, வெற்றி பெற்ற கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்.. என்ற முருகன் பாடல் குறித்த சுவாரசியமான கதை ஒன்றினை கூறினார்.
https://www.facebook.com/share/v/1Qvg3ZYoz3/
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன், பாடலுக்கான சந்தர்ப்பத்தைச் சொல்ல, வாலி தபால் அட்டையிலேயே பாடலின் சில வரிகளை எழுதி அனுப்பிவைத்தார். அந்த வரிகள், கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் என்பதில் தொடங்கி, பாடலின் முதல் பகுதியாக அமைந்தது. டி.எம்.எஸ்ஸின் அசத்தல் குரல்: மென்மையான பக்தியைக் கோரும் இந்தப் பாடலை டி.எம்.செளந்தரராஜன் தன் கணீர்க் குரலால் பாடி, முருகன் பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இந்தப் பாடலின் மெட்டும், பாடும் விதமும் இன்றும் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்தப் பாடல் வெளியாகி 71 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதன் புகழ் சற்றும் குறையவில்லை. இன்றும் பல்வேறு பட்டிமன்றங்கள், மேடைகள் மற்றும் வீடுகளில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. சாதாரண தபால் கார்டில் உருவான இந்த பாடல், தமிழ்த் திரையுலக வரலாற்றில் பொக்கிஷமாகத் திகழ்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.