Advertisment

தமிழ்நாட்டில் யாரும் வாங்கவில்லை... நானே வெளியிட்டு லாபம் பார்த்தேன் : முன்னா பாய் எம்.பி.பி.எஸ் தயாரிப்பாளர் ஓபன் டாக்

முன்னா பாய் எம்பிபிஎஸ் படத்தை தமிழ்நாட்டில் யாரும் விநியோகிக்க விரும்பவில்லை என்று படத்தின் தயாரிப்பாளரான விது வினோத் சோப்ரா கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Munna Bhai MBBS

முன்னா பாய் எம்பிபிஎஸ் படத்தில் சஞ்சய் தத்

தனது முன்னா பாய் எம்.பி.பி.எஸ் படத்தை தமிழில் வெளியிட யாரும் விரும்பவில்லை. இதனால் நானே சொந்தமாக வெளியிட்டு ஒரு கோடிக்கு அதிகமாக சம்பாதித்தேன் என்று தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா கூறியுள்ளார்.

Advertisment

பாலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ராஜ்குமார் ஹிரானி. சினிமாவில் எடிட்டராக இருந்த இவர், 2003-ம் ஆண்டு வெளியான முன்னா பாய் எம்.பி.பி.எஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், படத்தையும் தயாரித்தவர் தான் விது வினோத் சோப்ரா. ஆயுதம் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத்துக்கு ரீ-என்ட்ரியாக இந்த படம் அமைந்தது.

ஆங்கிலத்தில் படிக்க : A Tamil distributor refused to buy Munna Bhai MBBS for Rs 5 lakh, Vidhu Vinod Chopra released it himself and made Rs 1.6 crore

சமீபத்தில், கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் உடனான ஃபயர்சைட் பேச்சின்போது முன்னா பாய் எம்.பி.பி.எஸ் படம் குறித்து பேசிய விது வினோத் சோப்ரா, இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் முயற்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் ஒருவருடனான தனது அனுபவத்தை மேற்கோள் காட்டி பேசியிருந்தார். இந்த படத்தின் வெளியீட்டு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு அந்த தமிழ் விநியோக்தர் படதம்தை வாங்க மறுத்துவிட்டதாகவும், இதனால் வேறு வழி இல்லாமல் படத்தைத் தானே தமிழகத்தில் வநியோகித்தாகவும், ஆபத்தை அழகாக எதிர்கொண்டதாகவும் கூறியுள்ளார்.

முன்னா பாய படத்தை யாரும் விநியோகிக்க விரும்பவில்லை. உண்மையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், என் படத்தை 11 லட்சத்துக்கு வாங்கினார். இதற்காக 5 லட்சம் முன்பணம் கொடுத்திருந்தார். ஆனால் ரிலீசுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக என் படத்தைப் பார்த்த, அவர் இந்தப் படத்தை எடுக்க முடியாது இந்த படம் யாருக்கும் இது புரியாதுஎன்று கூறிவிட்டார். இதனால் நான் அவரிடம் வாங்கிய முன்பணத்தை திருப்பி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது என்னிடம் பணம் இல்லை என்றாலும் அவருக்கான 5 லட்சத்தை திருப்பி கொடுத்தேன்.

இதன்பிறகு என்ன செய்வது என்று யோசித்து, தமிழ்நாட்டின் பெரிய திரையரங்கான சத்யத்தில் ஒரு ஷோ வைத்திருந்த, விநியோகஸ்தராக இருந்த எனது நண்பரான ஷ்யாம் ஷெராப்பை அழைத்தேன், அவர் முன்னா பாய்க்கு 11.45 மார்னிங் ஷோ கொடுத்தார். அதன்பிறகு தமிழ்நாட்டில் வெளியான முன்னா பாய் எம்.பி.பி.எஸ். திரைப்படம், ரூ.1.67 கோடி வசூல் கொடுத்தது என்று கூறியுள்ளார்.

சஞ்சய் தத் குறித்து பேசிய அவர். ஆயுதம் வைத்திருந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த இண்டஸ்ட்ரியும் அவர் நடிக்க 'தடை' விதித்தது. அவர்களுடன் அவருடன் செயல்படுவதாக நானும் உறுதி அளித்தேன். இதனால் முன்னா பாய் எம்.பி.பி.எஸ் படத்தில் முதலில் ஷாருக்கான் முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்தார், ஆனால் அவர் விலகியதும் சஞ்சய் தத் இந்த படத்தில் நடித்திருந்தார் என்று கூறியுள்ளார்.

ராஜ்குமார் ஹிரானி இயக்கிய முன்னா பாய் எம்.பி.பி.எஸ் படத்தில் சஞ்சய் தத், அவரது தந்தை சுனில் தத், கிரேசி சிங் மற்றும் அர்ஷத் வார்சி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் 2003-ம் ஆண்டு வெளியானதை தொடர்ந்து, தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் 2006 ஆம் ஆண்டு லகே ரஹோ முன்னா பாய் என்ற தலைப்பில் இந்த படத்தின் 2-ம் பாகம் வெளியானது. இந்த படத்தில் சஞ்சய்க்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Sanjay Dutt
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment