Advertisment
Presenting Partner
Desktop GIF

நடிகர் அஜித் குமார் காலில் காயமா? ஷாக்கிங் வீடியோ

நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துவருகிறார். இதில், குட் பேட் அக்லி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது.

author-image
WebDesk
New Update
Ajith Kumar

நடிகர் அஜித் குமார் காலில் காயம் ஏற்பட்டதாக வீடியோ ஒன்று பரவிவருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் அஜித் குமார் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் அஜர்பைஜான் உள்ளிட்ட வெளிநாடுகளில் நடந்துவருகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித் குமார் திருப்பதி வெங்கடாச்சலப்பதி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவருகிறார்.
இந்த நிலையில் அண்மையில் விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகிவருகிறது. அந்த வீடியோவில் நடிகர் அஜித் குமார் சற்று கால் தாங்கி நடப்பது போல் உள்ளது. இதனால் நடிகர் அஜித் குமாரின் காலில் காயம் ஏற்பட்டதா? என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.
எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவல்களும் இதுவரை வரவில்லை. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார் விடாமுயற்சியை முடித்த கையோடு, குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்கிறார். விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கிவருகிறார். குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புதான் ஹைதராபாத்தில் நடந்துமுடிந்துள்ளது. முதல்கட்டமாக இங்கு சண்டைக் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Ajithkumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment