Amala Paul's Aadai: நடிகை அமலா பால் நடிப்பில் கடந்த வெள்ளியன்று ரிலீஸான திரைப்படம் ‘ஆடை’. இயக்குநர் ரத்ன குமார் இயக்கியிருந்த இந்தப் படத்தை வீ ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்திருந்தார்.
பெட் கட்டி எதையும் செய்யும் அமலா பால் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஆடை இல்லாமல் ஒரு நாள் முழுவதும் இருக்க சம்மதிக்கிறார். அதன் பிறகு நடந்தது என்ன என்பதே மீதி கதை. ஹீரோயினை முன்னிலைப் படுத்திய இக்கதையில் வி.ஜே. ரம்யா மற்றும் விவேக் பிரசன்னா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
.@Amala_ams hi dear, congrats on #Aadai , watched the film, your hard work shows on every frame???? are you open to healthy debate? I have a few questions to you & the director:) just as an audience, a woman and a mother of Girls, not as a film maker / actor ????
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) 21 July 2019
படத்தைப் பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும், அமலா பால் மற்றும் குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், “ஹாய் டியர் அமலா ஆடை படத்துக்கு வாழ்த்துகள். படம் பார்த்தேன், உன்னுடைய கடின உழைப்பு அத்தனை ஃப்ரேம்களிலும் தெரிகிறது. ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்கு நீங்கள் தயாரா? ஒரு பார்வையாளர், பெண், பெண் குழந்தைகளின் தாய் என்ற முறையில், உனக்கும் இயக்குநருக்கும் என்னிடம் சில கேள்விகள் இருக்கிறது. ஆனால் நடிகை / இயக்குநர் என்ற முறையில் இல்லை” என அழைப்பு விடுத்திருந்தார்.
இதை ஆடை படத்தின் இயக்குநர் ரத்னகுமார் ஏற்றுக் கொண்டதோடு, அந்த விவாதம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டால் நன்ன்றாக இருக்கும் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
Hi madam, thanks for the appreciation☺️????. I m always open to debate. Even amala paul is ready. But it would be better if we do it as a video if you prefer . https://t.co/GosdzCoCYh
— Rathna kumar (@MrRathna) 22 July 2019
இது தவிர, நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் அமலா பாலின் சமீபத்திய படமான ஆடையைப் பற்றி ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார். அதாவது இதேபோன்ற கதைக்களத்துடன் ’குடைக்குள் மழை’ என்ற தலைப்பில் 2004-ஆம் ஆண்டில் ஒரு படத்தை இயக்கியிருந்தார். இது கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
PRANKly speaking-ஆடை படத்தின் மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின்கூட்டியே மாற்றி 2004- 'குடைக்குள் மழை'வந்தது
வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது! 15 years பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும்
(eve teasing-ஐ விட கொடுமை)
ஒழிக்காமல் இருப்பது pic.twitter.com/JuHxPQkAzB
— R.Parthiban (@rparthiepan) 21 July 2019
இந்நிலையில் தனது ட்விட்டரில், “PRANKly speaking-ஆடை படத்தின் மூலக்கருவான Prank மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஆணாக பின்கூட்டியே மாற்றி 2004- 'குடைக்குள் மழை'வந்தது
வன்மையான கண்டனத்திற்கு + தண்டனைக்குரியது! 15 years பிறகும் ஒரு படம் உருவாக கருவான அந்த Prank-ஐ இன்னும்
(eve teasing-ஐ விட கொடுமை)
ஒழிக்காமல் இருப்பது” எனத் தெரிவித்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.