‘ஆடை’ படம் போஸ்டர்: ஆடை களைந்து நிற்கும் அமலா பால்... வெடிக்கும் சர்ச்சை!

Aadai First Look Out : அமலா பால் நடிப்பில் உருவாகும் ‘ஆடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பேப்பரை மட்டும் சுற்றி நிற்கும் அமலா போஸ்டர் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Aadai First Look Out : ஆடை போஸ்டர்

‘மேயாத மான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார். வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்த இந்த படம் எதிர்ப்பார்த்ததை விட அதிக அளவிலான வசூலை ஈட்டியது.

கடந்த ஆண்டு வெளியான அந்த படத்திற்கு அடுத்ததாக, தனது 2 வது படத்தை உருவாக்கி வருகிறார் ரத்னகுமார். பெண் கதாபாத்திரத்தை முன்னணியாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆடை எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தில் அமலா பால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர் இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

போஸ்டரில் அழுதபடி காணப்படும் அமலா பால் உடலில் இரத்தம் வடியும் அளவிற்கு காயங்களும், ஆடைகள் களைந்து வெறும் பேப்பரை மட்டும் உடலில் சுற்றியபடி இருக்கிறார். ஆடை இல்லாமல் பேப்பரை மட்டும் சுற்றியிருக்கும் அமலா பாலின் இந்த போஸ்டர் திடீரென சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close