Advertisment

Aadai: பெண்ணே பெண்ணை முத்தமிடுவதில் என்ன தவறு? - அமலா பால்

Amala Paul's Aadai: இதில் பாலியல் ரீதியாக எதுவும் இல்லை. அந்தக் காட்சியின் சூழலைப் புரிந்து கொள்ள முதலில் நீங்கள் படத்தைப் பார்க்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amala Paul Aadai Movie

அமலா பால்

Amala Paul's Aadai Movie: 'ஆடை’ பட புரமோஷனில் பிஸியாக இருக்கிறார் நடிகை அமலா பால். தமிழ், தெலுங்கில் வெளியாகும் இந்தப் படத்தை இயக்குநர் ரத்ன குமார் இயக்கியுள்ளார். நாளை இப்படம் திரைக்கு வருகிறது.

Advertisment

ஆடை படத்தின் ட்ரைலர் வெளியான போது, அதில் இடம்பெற்றிருந்த, அமலா பால், வி.ஜே.ரம்யாவுக்கு முத்தம் கொடுக்கும் ஒரு காட்சி வைரலானது. இதனால் ’ஆடை’ திரைப்படம் தன்பாலின உறவை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்குமோ என்ற கருத்து பரவியது. மறுபுறம் அந்தக் காட்சியில் போல்டாக நடித்திருந்த அமலா பாலின் ‘காமினி’ கேரக்டருக்கு பாராட்டுகள் குவிந்தது.

Amala Paul AAdai movie ஆடை படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள்

தற்போது அந்த முத்தம் பற்றியும், படத்தில் தான் நிர்வாணமாக நடித்து பற்றியும் மனம் திறந்திருக்கிறார் அமலா. முத்தக் காட்சியைப் பற்றி முன்னணி ஆங்கில இதழுக்கு பேட்டியளித்த அவர், “ஒரு பெண்ணை முத்தமிடுவதில் என்ன தவறு? அந்த ஷாட் ஸ்கிரிப்ட் செய்யப்படவில்லை, தன்னிச்சையானது. கதாபாத்திரத்துக்குள் வந்தவுடன், உங்களுக்குள் இருக்கும் நடிகர் உங்களை முழுமையாக ஆட்கொள்ள அனுமதிக்க வேண்டும்” என்றார்.

படத்தில் சில வெளிப்படையான கண்டெண்ட் எதுவும் இருக்கிறதா என கேட்கப்பட்டதற்கு, "இதில் பாலியல் ரீதியாக எதுவும் இல்லை. அந்தக் காட்சியின் சூழலைப் புரிந்து கொள்ள முதலில் நீங்கள் படத்தைப் பார்க்க வேண்டும். உண்மையில், அந்தக் காட்சியில் நடிக்கும் போது, நான் மிகவும் சக்தி வாய்ந்தவளாக உணர்ந்தேன். ஆரம்பத்தில், இதை எப்படி செய்வது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நடித்து முடித்த பிறகு, என் உடல் எனக்கு  இன்னும் கம்ஃபர்டபிளாக இருந்தது. உலகில் எந்த சவாலையும் எதிர்கொள்ள முடியும் என இதன் மூலம் உணர்ந்தேன். ’கடாவர்’ படத்தின் தயாரிப்பாளராக மாறுவதற்கான முழு பலத்தையும் ’ஆடை’ தான் கொடுத்தது” என்றார்.

Amala Paul AAdai movie ஆடை ஒர்க்கிங் ஸ்டில்

அதோடு ஆடை படத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு நிர்வாண காட்சி மற்றும் ஸ்கிரிப்ட் பற்றி தனது தாயிடம் சொன்னதாகவும், படத்திற்கு இதுபோன்ற காட்சி தேவைப்பட்டால் அதனை செய்யுமாறு அவர் கூறியதாகவும் தெரிவித்தார் அமலா பால்.

ஆடை டீஸரில், ஆடை இல்லாத அமலா பால் ஒரு உயரமான கட்டிடத்தில் சிக்கியிருப்பதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment