/tamil-ie/media/media_files/uploads/2020/03/Aadhvik-Ajith-Birthday-Celebration.jpg)
Aadhvik Ajith Birthday Celebration
Aadhvik Ajith Birthday Celebration : நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக், ’குட்டி தல’ என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். அதோடு தனது க்யூட்டான லுக்கிற்காக இணையத்தில் ஏற்கனவே மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.
வில்லியம்சன் அவுட் ஆனதும், விராட் அப்படி செய்திருக்க கூடாது: வெடித்த சர்ச்சை வீடியோ
இந்நிலையில், ஆத்விக்கின் ஐந்தாவது பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் கொண்டாடப்பட்டது. ரசிகர்களின் ஆதர்ச ஜோடிகளான அஜித் மற்றும் ஷாலினியின் நெருங்கிய நண்பர்கள் இதில் கலந்துக் கொண்டனர். ஷாலினியின் உடன்பிறந்தவர்களான ஷாமிலி, ரிச்சர்ட் ரிஷி ஆகியோரும் இந்த பிறந்தநாள் விழாவில் கலந்துக் கொண்டனர்.
#HBDChampAadvikAjith - Video Of The Day❤️
Once Again Wishing A Very Happy Birthday To Our Kutty THALA ????????#Valimai | #AadvikAJITHpic.twitter.com/H6hXzv3E1l
— THALA AJITH (@ThalaAjith_Page) March 1, 2020
சென்னை மெட்ரோ நீட்டிப்பு பணி கொரோனா வைரஸால் தாமதம் ஆகிறதா ?
ஆத்விக் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அழகான உடையில் “ஷோ ஸ்டன்னராக” காட்சியளிக்கிறார் ஆத்விக். அதே நேரத்தில் ஆத்விக்கின் அப்பாவோ, கறுப்பு உடையில் அட்டகாசமான தோற்றத்துடன் இருக்கிறார். கேக் வெட்டிய பிறகு ஏராளமான ரசிகர்களுடன் பொறுமையாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார் அஜித். கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரத்திற்கு அது பெஸ்ட் ஈவ்னிங்காக அமைந்தது. இதற்கிடையே ஆத்விக்கின் பிறந்தநாள் மார்ச் 2, அதாவது இன்று தான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.