Advertisment
Presenting Partner
Desktop GIF

சென்னையில் அமீர்கான்: தாயார் சிகிச்சைக்காக சில மாதங்கள் தங்க முடிவு

நடிகர் அமீர்கானின் தாய் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு உதவியாக இருக்க அமீர்கானும் சென்னையில் சில மாதங்கள் தங்க உள்ளார்.

author-image
WebDesk
New Update
mother

அமீர்கான்

நடிகர் அமீர்கானின் தாய் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு உதவியாக இருக்க அமீர்கானும் சென்னையில் சில மாதங்கள் தங்க உள்ளார்.

Advertisment

ஹிந்தி நடிகர் அமீர்கானின் தாய் ஜீனத் ஹுசைன். இவருக்கு 89 வயதாகிறது. இந்நிலையில் இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தாய்க்கு உதவியாக இருக்க, அமீர்கான் சென்னையில் சில மாதங்கள் தங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

நடிகர் அமிர்கான் சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் கூட இது தொடர்பாக பேசி உள்ளார் “ சினிமாவில் நடிப்பதை சிறிது காலம் நிறுத்திவிட்டு, தாய் மற்றும் மூன்று குழந்தைகளான ஜுனைய்டு, இரா, அசத் ஆகியோரை கவனித்துகொள்ள உள்ளேன் என்று கூறினார்.

மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அவர் பேசிபோது நான் ஒரு நடிகராக இருக்கும்போது, அதில்தான் அதிக கவனம் செலுத்தினேன். எனது வாழ்வில் வேறு எதுவும் நடக்கவில்லை என்று நினைத்துகொண்டிருந்தேன். லால் சிங்க சந்த் திரைப்படத்திற்கு பிறகு சாம்பியன்ஸ் என்ற படத்தில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். படத்தின் கதை மிகவும் அழகானது. ஆனால் எனது குடும்பத்துடன் இருக்க வேண்டும் என்பதால் அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறினார். 

  தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment