/tamil-ie/media/media_files/uploads/2020/06/10-2.jpg)
aaradhana sivakarthikeyan instagram
aaradhana sivakarthikeyan instagram : தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்களின் குழந்தைகைகள் சினிமாவில் கால் பதித்து வருகின்றனர். விஜய் மற்றும் ஜெயம் ரவி போன்றவர்களின் குழந்தைகள் சினிமாவில் முகம் காண்பித்துவிட்டனர்.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தனது மகள் ஆராதனாவை சினிமாவில் கால் பதிக்க வைத்துவிட்டார். நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமான திரைப்படம் 'கனா'.படம் வெளியாகும் முன்பே இந்த பாடத்தின் லிரிக்கள் வீடியோ இரண்டே நாட்களில் 5 மில்லியன் கடந்தது. அதற்கு காரணமே சிவகார்த்திகேயன் செல்ல மகள் ஆராதனா பாடிய வாயடி பெத்த புள்ள பாடல் தான்.
இப்போது லாக்டவுன் காரணமாக சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும் வீட்டில் பொழுதை கழித்து வருகின்றனர். அப்படி வீட்டில் சிவா தனது மகளுடன் மொத்த நேரத்தை செலவிடுகிறார். தனது மகள் ஆராதனாவுக்கு வீடியோ கேம்ஸ் விளையாட கற்றுக் கொடுக்கிறார்.
சீரியலில் இல்லை நிஜத்தில் விதவிதமாக சமைத்து கணவரை அசத்தும் ஜானு!
இடை இடையில் இரண்டு பேரும் செல்ல சண்டையும் போட்டு வருகிறார்களாம். கூடவே சமையலில் மனைவிக்கு உதவியாக இருக்கிறாராம் சிவா.
விஜய் டிவியில் கிங்ஸ் ஆஃப் காமெடி மூலம் அறிமுகமாகி, காம்பேரராக மாறி தனது வாயாடலால் உலக தமிழர்கள் அனைவரையும் சிரிக்க வைத்து, தனது கடின உழைப்பால், சினிமா எனும் சிம்மாசனம் ஏறியுள்ளார் சிவகார்த்திகேயன்.நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், எல்லா மேடைகளிலும் தனது அம்மா மற்றும் மனைவி பற்றி பதிவு செய்யாமல் இருந்ததில்லை.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.