/tamil-ie/media/media_files/uploads/2023/04/Ajith.jpg)
தன்னுடைய தீவிர ரசிகரின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட அஜித்; காரணத்தை விளக்கும் நடிகை ஆர்த்தி
நடிகர் அஜித் குமார் தனது தீவிர ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் குறித்து நடிகை ஆர்த்தி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இதுவரை 61 படங்களில் நடித்திருக்கும் அஜித், தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித்திற்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் தீவிர ரசிகர்களும் அதிகம்.
இந்நிலையில் நடிகை ஆர்த்தி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அஜித் குறித்த முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலுக்கு ஆர்த்தி அளித்த பேட்டியில், "அஜித் சாரின் ஒரு படப்பிடிப்பில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போது அவரது ரசிகர் ஒருவர் தனது தலையில் 'தல' என்று முடியை கட் செய்து வந்திருந்தார். அவ்வளவு கூட்டத்திலும் அதை அஜித் கவனித்துவிட்டார். பிறகு காவல் துறையினரிடம் சொல்லி அந்த ரசிகரை தன்னிடம் அழைத்துவர சொன்னார்.
அந்த ரசிகர் அருகே வந்ததும் அவரது கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைவிட்டார். அதோடு நில்லாமல் அந்த ரசிகருடன் தனது உதவியாளரை அனுப்பி மொட்டை அடிக்க வைத்தார். அந்த ரசிகரும் மொட்டை அடித்துவிட்டு அஜித்தை பார்க்க வந்தார். அப்போது எதுவும் சொல்லாமல் அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். புகைப்படம் எடுத்துக்கொண்ட பிறகு, நீ தல என்று முடியை கட் செய்ததற்கு உனது பெற்றோர்கள் சந்தோஷப்படமாட்டார்கள். உங்களுடைய அன்பு இதயத்தில் இருந்தால் போதும் என எடுத்துக் கூறி அனுப்பிவைத்தார்" என்று ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.