Actress Aathmika Latest Photos : உச்ச நடிகைகளில் இருந்து நடிகையாக விரும்புவோர் வரைக்கும் செய்யும் பொதுவான விஷயம், வித விதமான படங்களை எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்வது. முன்னணி நடிகைகளே அதிக சிரத்தை எடுத்து இதனை செய்து வரும் வேளையில், வளர்ந்து வரும் நடிகைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். வாரத்திற்கு 3 - 4 ஃபோட்டோ ஷூட்களையாவது நடத்தி விடுகிறார்கள்.
அந்த வகையில் நடிகை ஆத்மிகா குறிப்பிடத் தகுந்தவர். இவர் ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தில், ஹிப்பாப் ஆதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ படத்திலும் நடித்தார். இதில் அரவிந்த் சாமி, ஷ்ரேயா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கெளதம் மேனனின் ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்த இப்படம், ஃபைனான்ஸியல் பிரச்னைகளால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
வெள்ளை உடையில் ஒரு கேண்டிட்
ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் பார்வை
ஆத்மிகாவின் பார்வையில் தான் எத்தனை ரகம்
காந்த கண்ணழகி...
ஒற்றை கண்ணில் வழியும் அந்த ஏக்கம்...
மெல்ல கவர்ச்சிக்கு மாறும் ஆத்மிகா...
சில படங்களிலும் நடித்து வரும் ஆத்மிகா, சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவ். அவ்வப்போது தன் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அவரின் சமீபத்திய ஃபோட்டோஷூட் படங்கள் தான் மேலே நீங்கள் காண்பவை. இதே மாதிரியானா ‘போஸ்’களை சமந்தா தான் அதிகம் கொடுப்பார். ஆகையால் ஆத்மிகா, சமந்தாவின் பாணியைப் பின்பற்றுகிறாரோ என்ற எண்ணம் இந்தப் படங்களைப் பார்க்கும் போது தோன்றுகிறது.