’கடவுள் ஏன் உங்களை மிக விரைவில் அழைத்துச் சென்றார்?’ அப்பா திடீர் மறைவு குறித்து ஆத்மிகா உருக்கம்

“என்னுள் உருவாகியுள்ள வெற்றிடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது. உங்களை இழந்ததில் நான் உணர்ந்த வேதனை ஒருபோதும் நீங்காது.”

Aathmika's father Passed Away
Aathmika's father Passed Away

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஆத்மிகா, ஜூன் 26-ஆம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் தனது தந்தையை இழந்துள்ளார். கொரோனா வைரஸ் பூட்டுதல் காரணமாக, அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி, அவரது இறுதி சடங்குகள் தனிப்பட்ட முறையில் நடத்தப்பட்டுள்ளன.

டிக்டாக் செயலி தடை : பெரும் பாதிப்பை சந்திக்கும் பைட்-டான்ஸ் நிறுவனம்!

இதனால் மனமுடைந்த ஆத்மிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரது அன்பு அப்பாவுக்கு, உணர்வுப்பூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களுக்கு விடைகொடுக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் உங்களை மிஸ் பண்ணுகிறேன் என்று சொல்ல எனக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இனி உங்களிடம் என் அன்பைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்று எனக்குத் தெரியும். இந்த வலியால் வருத்தப்படுகிறேன், நீங்கள் எப்படி மறைந்து போக முடியும்? கடவுள் ஏன் உங்களை மிக விரைவில் அழைத்துச் சென்றார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 

View this post on Instagram

 

❤️

A post shared by aathmika???????? (@iamaathmika) on

என்னுள் உருவாகியுள்ள வெற்றிடத்தை ஒருபோதும் நிரப்ப முடியாது. உங்களை இழந்ததில் நான் உணர்ந்த வேதனை ஒருபோதும் நீங்காது. ஆனால் ஒவ்வொரு நாளும் நீங்கள் என் இதயத்தில் இருப்பீர்கள். என் வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக தோன்றினாலும், அப்போது நீங்கள் சிரிப்பதைப் பற்றி நான் நினைத்துக் கொள்வேன். ஒப்பிடுவதற்கு அப்பாற்பட்ட நீங்கள் என் சிறப்பு ஆத்மா. எனக்குத் தெரிந்த அனைத்தும், நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தது தான். நீங்கள் என்னை வலிமையாகவும் சுதந்திரமாகவும் வளர்த்தீர்கள். நான் எப்போதும் உங்களது மகளாக இருப்பேன், நீங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்த எல்லா நல்ல மதிப்புகளையும் தொடருவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aathmika father passed away her emotional message is here

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com