Actress Aathmika Latest Photos : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஆத்மிகா. ‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தில், ஹிப்பாப் ஆதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கிய ‘நரகாசூரன்’ படத்திலும் நடித்தார். இதில் அரவிந்த் சாமி, ஷ்ரேயா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கெளதம் மேனனின் ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்த இப்படம், ஃபைனான்ஸியல் பிரச்னைகளால் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது.
இதற்கிடையே வேறு சில படங்களிலும் நடித்து வரும் ஆத்மிகா, சமூக வலைதலங்களில் செம்ம ஆக்டிவ். அவ்வப்போது தன் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். கையில் படம் இருக்கிறதோ இல்லையோ, வாரத்திற்கு 2 ஃபோட்டோஷூட்களை நடத்தி அவற்றை இணையத்தில் உலவ விடுவது, நடிகைகளிடம் பொதுவாகக் காணப்படும் குணம்.
வெள்ளை ஃப்ராகில் ஆத்மிகா
காலேஜ் கேர்ள் லுக்
ஸ்டைலிஷ்...
கேஷுவல் க்ளிக்...
ரெட் ஹாட்
சிவப்பு சேலையில்...
ஆத்மிகா லேட்டஸ்ட் படங்கள்
வழி மேல் விழி வைக்கிறதுன்னா இதுதானா?
கார்ஜியல்
ஆனால், நடிகை ரம்யா பாண்டியன் சேலையில் எடுத்தப் படங்கள் சோஷியல் மீடியாவில் வைரல் ஹிட்டானதைத் தொடர்ந்து, தற்போது மற்ற நடிகைகளும் அந்த பாணியைப் பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் நடிகை ஆத்மிகா சமீபத்தில் சிவப்பு நிற சேலையில் எடுத்துக் கொண்ட படங்களை இணையத்தில் உலவ விட்டிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்தப் படங்களுக்கு ஹார்ட்டின் லைக்குகளை அள்ளி வீசுகின்றனர்.