100 நாளில் சி.எம் ஆகுறதுக்கு பண்ற வேலை இருக்கே; கமலை விளாசிய பிக் பாஸ் 5 போட்டியாளர்; விமர்சிக்கும் நெட்டிசன்கள்

Abisheik Raja criticize bigg boss video goes viral: பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்த அபிஷேக் ராஜா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Abisheik Raja criticize bigg boss video goes viral: பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்த அபிஷேக் ராஜா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Bigg Boss Season 5, Bigg Boss Tamil Season 5

Bigg Boss Season 5, Bigg Boss Tamil Season 5

பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்த அபிஷேக் ராஜா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டுள்ளதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Advertisment

விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் சீசன் 5 ஞாயிற்றுக்கிழமை பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. தொகுப்பாளினி பிரியங்கா, சீரியல் நடிகர் ராஜு, நமீதா மாரிமுத்து, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட 18 பேர் போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது இந்த சீசனில் போட்டியாளராக இருக்கும் அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்த வீடியோ. அபிஷேக் ராஜா. இவர், Youtube-ல் திரைப்படங்களுக்கு விமர்சனம் செய்து பிரபலமானவர்.

வீடியோவில் அபிஷேக், பிக் பாஸ் நிகழ்ச்சியை மட்டுமல்லாது கமலஹாசனையும் விமர்த்திருப்பார். அந்த வீடியோவில் அபிஷேக், கண்ணால பார்க்குற எதையும் நம்ப முடியல, ஏன்னா ஊருக்கே தெரியும்டா உங்களை கேமரா வச்சு எடுத்துக்கிட்டு இருக்காங்கனு, ஆனால் கிடைச்ச 100 நாள்ல நீ தமிழ்நாடு சி.எம். ஆகணும் என்பதற்காக பண்ற வேலைலாம் இருக்கு தெரியுமா? முடியலடா என்னால, கேட்டால் பிக் பாஸுங்கிறீங்க என பேசியுள்ளார்.

Advertisment
Advertisements

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் அரசியல் பேசுவது, பொதுக்கருத்துக்களை கூறுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த நிலையில் அபிஷேக் கமலஹாசனையும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் விமர்சித்து விட்டு, அந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளராக சென்றிருப்பதை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வீடியோவை கமல்ஹாசனுக்கு டேக் செய்து, ப்ரோ இது என்னனு பாருங்க என தெரிவித்துள்ளனர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களை தேர்வு செய்யும்போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதை கவனிக்க வில்லையா, அபிஷேக் பிக் பாஸ் நிகழ்ச்சியை கிழித்து தொங்கவிட்டதை பற்றி எல்லாம் தெரியாமலா தேர்வு செய்தீர்கள் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kamal Haasan Bigg Boss Tamil Vijay Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: