Academy Awards 2020 : திரையுலகில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று காலை நடைப்பெற்றது. இதில் சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டு படம் ஆகிய பிரிவுகளில் 3 ஆஸ்கர் விருதுகளை பெற்ற தென்கொரியாவின் பாராசைட் படம் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றுள்ளது. இதன் மூலம் 4 ஆஸ்கர் விருதுகளை குவித்திருக்கிறது தென்கொரியாவின் பாராசைட் படம். அதோடு ஜோக்கர் 2 விருதுகளையும் பெற்றது.







