இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம் - 'அக்யூஸ்ட்' படக்குழு விமர்சனம்

கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 'அக்யூஸ்ட்' படக்குழுவினர், இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம் என்பதை வலியுறுத்தினர்.

கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 'அக்யூஸ்ட்' படக்குழுவினர், இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் தான் முக்கியம் என்பதை வலியுறுத்தினர்.

author-image
WebDesk
New Update
cinema

Advertisment

இன்றைய தமிழ் சினிமாவில் கதைக்களத்தின் (கன்டென்ட்) முக்கியத்துவத்தை 'அக்யூஸ்ட்' திரைப்படக் குழுவினர் கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வலியுறுத்தினர். நடிகர் யோகி பாபு, ரஜினி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதும், நடிகர் உதயாவுக்காக 'அக்யூஸ்ட்' படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கி முழு ஒத்துழைப்பு அளித்த தகவலையும் படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர்.

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி 'அக்யூஸ்ட்' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் பிரபு ஸ்ரீநிவாஸ், நடிகர்கள் உதயா, அஜ்மல், நடிகை ஜான்விகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

படத்தின் இயக்குனர் பிரபு ஸ்ரீநிவாஸ் பேசுகையில், "ஆக்சன்-ஃபேமிலி என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படம் திரை ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும். இந்த படத்தில் நடிகர் உதயாவின் கடுமையான உழைப்பைப் பார்க்க முடியும். குறிப்பாக, யோகி பாபு சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதுகூட, உதயாவிற்காக கால்ஷீட் ஒதுக்கி முழு ஒத்துழைப்பை வழங்கினார்" என்றார்.

Advertisment
Advertisements

மேலும் பேசிய படக்குழுவினர், "இன்றைய தமிழ் சினிமாவில் கன்டென்ட் என்பது மிக முக்கியம். அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பல படங்களுக்கு அவற்றின் கன்டென்ட் தான் முக்கிய காரணம். அந்த வகையில் 'அக்யூஸ்ட்' படத்திலும் நல்ல ஒரு கன்டென்ட் இருப்பதாகவும், இது திரை ரசிகர்களை நிச்சயம் கவரும்" எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

பி. ரஹ்மான், கோவை மாவட்டம்.

 

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: