சுந்தர் சி-யின் ‘ஆக்ஷன்’ விஷாலுக்கு கைக்கொடுத்ததா?
Action 2019 Movie Ratings Updates : ஹாலிவுட் படங்களில் எப்படி பெண் கதாபாத்திரம் தைரியமானதாகவும், கிளாமராகவும் இருக்குமோ, அதே போன்று இந்த படத்தில் என் கதாபாத்திரம் இருக்கும்.

Vishal, Tamannaah Starrer Action Movie Release: இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சாயா சிங், ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஆக்ஷன். டட்லி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் களத்தில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் ஆக்ஷன் திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார் தமன்னா.
இது குறித்து தமன்னா, “நானும், விஷாலும் கமாண்டோக்களாக நடித்துள்ளோம். ஹாலிவுட் படங்களில் எப்படி பெண் கதாபாத்திரம் தைரியமானதாகவும், கிளாமராகவும் இருக்குமோ, அதே போன்று இந்த படத்தில் என் கதாபாத்திரம் இருக்கும். பெண் கதாபாத்திரத்தை வலுவானதாக அமைத்துள்ளார் சுந்தர் சி. அவரை போன்று மேலும் பல இயக்குநர்கள் தங்கள் படங்களில் பெண்களுக்கு வலுவான கதாபாத்தரம் கொடுக்க வேண்டும்” என்றார்.
ஆக்ஷன் திரைப்படம் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
சுந்தர் சி அவரது கம்ஃபோர்ட் ஸோனிலிருந்து வெளியே வந்து ஆக்ஷன் படத்தை எடுத்திருக்கிறார். ஆனால் அது கைக்கொடுக்கவில்லை என்பது இவரின் கருத்து.
இப்படியான கதைகளை தைரியமாக தேர்வு செய்த நடிகர் விஷாலுக்கு வாழ்த்து
ஆக்ஷன் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு
அதிரடியான வீக்கெண்டிற்கு தயாராகுங்கள் என ஆக்ஷன் படத்தின் இசையமைப்பாளர் ஹிப்பாப் ஆதி ட்வீட் செய்துள்ளார்.
விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யா, ஆக்ஷன் குழுவினருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
படம் தொடங்குவதற்கு முன்பு ஸ்கிரீனில் தோன்றும் விஜய் சேதுபதி, ஆக்ஷன் படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவார் என விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தெரிவித்துள்ளது.
ஆக்ஷன் படத்தில் நடித்திருக்கும் கபீர் சிங், ஆக்ஷன் படத்தை தவறாமல் பாருங்கள் என ட்வீட் செய்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் ஆக்ஷன் படத்தின் டீசர் செப்டம்பர் 13-ம் தேதி வெளியிடப்பட்டது.