Advertisment

நடிகர் அஜித்துடன் அஜர்பைஜானில்... ஆரவ் புகைப்படங்கள் வைரல்

பிக்பாஸ் சீசன் 1 வெற்றியாளர் ஆரவ் நடிகர் அஜித் குமாருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ajith Arav

அஜர்பைஜானில் அஜித்குமாருடன் ஆரவ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் அஜித் நடித்து வரும் விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ஆரவ் நடிகர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

துணிவு படத்திற்கு பின் நடிகர் அஜித் தற்போது விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில், அர்ஜூன் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில், மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வரும் நிலையில், துபாயில் தங்கியுள்ள நடிகர் அஜித் அங்கிருந்து அஜர்பைஜான் சென்று ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவ்வப்போது புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்து வரும் நடிகர் ஆரவ் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

படத்தில், அஜித் எப்போதும் போஸ் கொடுப்பது போல் ஆரவ்வுடன் ஸ்டைலாக இருக்கிறார். ஷூட்டிங் முடிந்து மாலையில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பிக்பாஸ் சீசன் 1-ல் வெற்றியாளரான ஆரவ், விடாமுயற்சி படத்தில் ஆரவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. விடாமுயற்சி படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கிய கலக தலைவன் படத்தில் வில்லன் வேடத்தில் காணப்பட்டார்.

தற்போது மீண்டும் 2-வது முறையாக மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், படத்தின் கடைசி ஷெட்யூல் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது படப்பிடிப்பில் இருந்து படக்குழுவினர் ஓய்வு எடுத்துள்ள நிலையில், பிப்ரவரி மாத இறுதியில் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment