தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்ற பெயருடன் வந்த நடிகர் அப்பாஸ் கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.
கடந்த 1996-ம் ஆண்டு வெளியான காதல்தேசம் படத்தின் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அப்பாஸ். தொடர்ந்து விஐபி, பூச்சூடவா, ஜாலி, ஆசைத்தம்பி, பூவேலி, படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள அப்பாஸ்,2015 க்குப் பிறகு, திடீரென நடிப்பில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார்.
நியூசிலாந்தில் நடுத்தர வர்க்க வாழ்க்கையை வாழ முடிவு செய்து வாழ்ந்து வரும் அப்பாஸஜ் தற்போது சென்னை திரும்பியுள்ள நிலையில், தற்போது, சினிமாவில் தான் சந்தித்த போராட்டங்கள் குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். இதில் தனது படங்கள், சூப்பர்ஹிட் “முஸ்தபா முஸ்தபா” பாடல் மற்றும் ஹார்பிக் விளம்பரங்களில் நடித்ததற்காக கேலி செய்யப்பட்டது குறித்து பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
நடிப்பை விட்டுவிட்டு நியூசிலாந்து பயணம்
நடிப்பை விட்டு விலகியது குறித்து பேசிய அப்பாஸ், “ஒரு கட்டத்திற்குப் பிறகு, நடிப்பு எனக்கு சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கியது. சில வருடங்களுக்குப் பிறகு உறவில் உங்களுக்கு எப்படிப் பிரச்சனைகள் வருகிறதோ, அதேபோன்ற ஒரு சிக்கலை எனது தொழில் வாழ்க்கையிலும் சந்தித்தேன். எனக்கே சலிப்பு ஏற்பட்டுவிட்டதால், இயல்பாகவே என்னை திரையில் பார்க்கும் சினிமா ரசிகர்களும் சலிப்படைவார்கள் என்பதை உணர்ந்தேன். அதனால் சிறந்த நடிகர்களுக்கான இடத்தைப் பிடிப்பது சரியல்ல என வேறு ஏதாவது செய்ய முடிவு செய்தேன்.
நடிகர் நியூசிலாந்திற்குச் சென்று இரண்டு மாதங்களுக்கு எனது எதிர்காலத்தைத் யோசித்தேன். "நாங்கள் நியூசிலாந்தில் ஒரு தொழிலைத் தொடங்கவிருந்தோம், அதை என் மனைவி பார்த்துக்கொள்வார். எனக்கு வேலை கிடைக்காவிட்டால் எனது ஓய்வு நேரத்தில் என்ன செய்வேன் என்று யோசித்தேன். அப்போது தான் இந்தியாவில் நான் செய்யாத விஷயங்களைச் செய்ய முடிவு செய்தேன். மோசமான சூழ்நிலையில், நான் வண்டிகளை ஓட்டுவேன் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன் அதன்பிறகு நான் அங்குள்ள மக்களுடன் அந்த வழியில் பழக தொடங்கினேன் ”என்று அவர் கூறியுள்ளார்.
சென்னையில் பழகிய வாழ்க்கையிலிருந்து நியூசிலாந்து வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டது. கட்டுமானத் தளத்தில் பெட்ரோல் பம்பில் வேலை செய்வது போன்ற பல வேலைகளைச் செய்தேன். ஆனால் “கட்டுமான இடத்தில் இருக்கும் கழிப்பறையை நான் பயன்படுத்த மாட்டேன். அதற்கு பதிலாக நான் ஒரு பெட்ரோல் பம்பிற்குச் சென்று, ஏதாவது வாங்கி, அங்குள்ள கழிவறையைப் பயன்படுத்துவேன். அங்குள்ளவர்கள் என்னை எங்காவது பார்த்திருக்கிறீர்களா என்று யோசிப்பார்கள். அந்த மாதிரியான சில நேரங்களில், நான் அப்பாஸ் என்பதை அவர்களுக்கு சொல்வேன். அவர்கள் அதிர்ச்சியடைவார்கள்.
ஹார்பிக் விளம்பரங்களில் நடித்ததற்காக ட்ரோல் செய்யப்பட்ட அப்பாஸ்
ஒரு கட்டத்தில் தமிழ்நாட்டின் ஹார்பிக் முகமாக அப்பாஸ் இருந்தார். பிரபலமான டாய்லெட் கிளீனரை விளம்பரப்படுத்தும் பல விளம்பரங்களில் அவர் நடித்துள்ளார். மேலும் இதுபோன்ற விளம்பரங்களில் நடித்ததற்காக பல யூடியூப் வீடியோக்களில் கடுமையாக கேலி செய்யப்பட்டார். அத்தகைய விமர்சனம் உங்களை வருத்தப்படுத்தியதா என்று கேட்டதற்கு, அப்பாஸ், “இல்லை, அது இல்லை. சுகாதாரம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நான் அவர்களைக் குடிக்கச் சொல்லவில்லை. குளியலறையில் இதைப் பயன்படுத்துங்கள் (சிரிக்கிறார்) என்று தான் சொன்னேன். நான் சொல்வதை நீங்கள் நீங்கள் விரும்பவில்லை என்றால் உங்கள் வீட்டை அழுக்காக வைத்திருக்க விரும்பினால், அது உங்கள் விருப்பம் என்று கூறியுள்ளார்.
மேலும் “எனக்கு நிறைய நேரம் இருந்தது, அவர்கள் (ஹார்பிக்) எனக்கு நல்ல பணம் கொடுத்தார்கள். ஒப்பந்தம் எட்டு ஆண்டுகள் நீடித்தது, நான் பல படங்களில் நடிக்காததால் அந்த பணத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தேன். உங்கள் ஈகோவை தூக்கி எறிந்துவிட்டு, உணவை மேசையில் வைக்க வேறு வழிகளைக் கண்டுபிடிக்காத வரை, யாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை. நான் எல்லாத் தொழில்களையும் சமமாக நடத்துகிறேன். எல்லோரும் அதை தங்கள் குடும்பத்திற்காக செய்கிறார்கள். அதுதான் இறுதி முடிவு என்று கூறியுள்ளார்.
முஸ்தபா முஸ்தபா
27 ஆண்டுகளுக்குப் பிறகும், காதல் தேசம் படத்தில் வரும் முஸ்தபா முஸ்தபா பாடல் தமிழகத்தில் நட்பு கீதமாகத் தொடர்கிறது. இருப்பினும், அப்பாஸுக்கு, இந்த பாடல் அதிகாலை ஷூட்டிங் ஷெட்யூல்களை நினைவுபடுத்துவதாக கூறியுள்ளார். இந்த பாடலை கேட்கும்போது “ஊட்டி குளிர்காலத்தில் அதிகாலை 4 மணிக்கு எழுந்தது மட்டும் எனக்கு நினைவிருக்கிறது. அறைக்கு காபி கொண்டு வரப்படும், நான் படப்பிடிப்புக்கு உடனடியாக தயாராக வேண்டும். நாங்கள் மூன்று ஸ்வெட்டர்களை அணிவோம், ஆனால் ஷாட்டுக்காக, அவற்றையெல்லாம் கழற்ற வேண்டியிருந்தது. கதிர் சார் படத்தில் மாண்டேஜுக்கு சூரிய உதயத்தை படமாக்க விரும்பினார். இவை மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மனநலத்துடன் போராடும் அப்பாஸ்
அப்பாஸ் மனநலம் தொடர்பான தனது போராட்டத்தை வெளிப்படுத்தினார், மேலும் தனக்கு 15 வயதாக இருந்தபோதும் தற்கொலை எண்ணங்கள் இருந்ததாகக் கூறியுள்ள அவர், வாழ்க்கையில் மிகப்பெரிய போர் தன்னுடன் இருப்பதாக நம்புவதாகக் கூறியுள்ள அவர், நாம் யார் என்பதை புரிந்து கொண்டால் பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும். உங்களுக்கு என்ன வேண்டும் என்று தெரிந்தால் எல்லா பிரச்சனையும் ஓய்ந்துவிடும்.
“தனிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் சரி அல்லது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி நிகழ்காலம் அல்லது கடந்த கால பிரச்சனைகள். நான் ஒரு உதவியாளரை தவறாக நடத்தியிருக்கலாம். நான் அதை என் முயற்சியால் , சூழ்நிலையை உருவாக்கி அதைச் சரிசெய்கிறேன். நீங்கள் சிக்கலை சரியாகக் கண்டறிந்து அதை அகற்ற வேண்டும். குழந்தைப் பருவத்தில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக நமது பெரும்பாலான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நீங்கள் அதை நிவர்த்தி செய்தவுடன், 60 முதல் 70 சதவீத பிரச்சினைகள் தீர்க்கப்படும் என கூறியுள்ளார்.
இப்போது, ஒன்பது வருட நடிப்பில் இருந்து இடைவெளிக்குப் பிறகு, அப்பாஸ் மீண்டும் நடிப்பை தொடர தயாராகியுள்ளார். அவர் கடைசியாக மலையாளத் திரைப்படமான பச்சக்கல்லம் (2015) இல் நடித்தார். தமிழில், அவர் கடைசியாக ராமானுஜன் வாழ்க்கை வரலாற்றில் இந்திய விஞ்ஞானி பிரசாந்த சந்திர மஹாலனோபிஸ் வேடத்தில் நடித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.