Advertisment

நடிகர் அஜித் அப்பல்லோவில் திடீர் அனுமதி: காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Actor Ajith admitted Chennai Apollo hospital for regular check up Tamil News

நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Actor Ajith: தமிழ்த் திரையுலகில் உச்சபட்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கில் 'விடாமுயற்சி' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருடன் இணைந்து திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

Advertisment

இந்நிலையில், 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நாட்டில் நடந்த முடிந்துள்ளது. தற்போது நடிகர் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வந்தார். படத்தின் 2-வது கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் அஜித் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அஜித் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை வீடு திரும்புவார் என்றும் அவரது மேலாளர் தெரிவித்துள்ளார். வருகிற 15 ஆம் தேதி விடா முயற்சி படபிடிப்பில் நடிகர் அஜித் கலந்து கொள்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Actor Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment