தல அஜித் மற்றும் படை… தீபாவளிக்கு உங்களை பாதுகாக்க தயார்

ஆளில்லா விமானங்கள் தயாரிப்பில் தல அஜித் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழு, தீபாவளி பண்டிகையன்று சென்னை மாநகரத்தைப் பாதுகாக்கும் பணியில் இறங்கவுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் அஜித்தை சென்னையில் உள்ள பல்கலைக்கழகம் விமானத்துறை கல்விப்பிரிவின் கௌரவ ஆலோசகராகப் பணியமர்த்தியது. புதிய கண்டுபிடிப்புக்கான தக்‌ஷா குழுவில் அவர் இடம் பெற்றார். இதன் மூலம் அண்மையில் இக்குழு சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் இடம்பெற்றது. ஆஸ்திரேலியாவில் யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்சில் சிறப்பாகச் செயல்பட்டு சர்வதேச போட்டியில் குயின்ஸ்லாந்தில் […]

ajith, அஜித்
ajith, அஜித்

ஆளில்லா விமானங்கள் தயாரிப்பில் தல அஜித் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழு, தீபாவளி பண்டிகையன்று சென்னை மாநகரத்தைப் பாதுகாக்கும் பணியில் இறங்கவுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் அஜித்தை சென்னையில் உள்ள பல்கலைக்கழகம் விமானத்துறை கல்விப்பிரிவின் கௌரவ ஆலோசகராகப் பணியமர்த்தியது. புதிய கண்டுபிடிப்புக்கான தக்‌ஷா குழுவில் அவர் இடம் பெற்றார். இதன் மூலம் அண்மையில் இக்குழு சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டியில் இடம்பெற்றது. ஆஸ்திரேலியாவில் யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்சில் சிறப்பாகச் செயல்பட்டு சர்வதேச போட்டியில் குயின்ஸ்லாந்தில் தக்‌ஷா குழு 2-ம் இடம்பிடித்திருந்தது.

நடிகர் அஜித் மற்றும் தக்‌ஷா குழு தீபாவளி பாதுகாப்பில்

இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகைக்காக ஆடைகள், அணிகலன்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதையொட்டி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், ஆர்-1 காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

actor ajith operation drone, தல அஜித்

மேலும் தல மற்றும் குழு இணைந்து வென்ற ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பை சென்னையில் தீபாவளி ஷாப்பிங் செய்யும் மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும், கூட்டத்தைக் கண்காணிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது. இதனை அவர்கள் காவல்துறையுடன் இணைந்து செயல்படுத்த உள்ளனர்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor ajith and his daksha crew ready for diwali patrol

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com