அட, இந்த கவுன்சிலர் அஜித்துக்கு ஃப்ரெண்டா? ஜோடியாக ஒரு பைக் ரைட்

நடிப்பு மட்டுமல்லாது துப்பாக்கிச்சுடுதல் பைக் ரைடு உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்ட அஜித். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் பங்கேற்றார்.

நடிப்பு மட்டுமல்லாது துப்பாக்கிச்சுடுதல் பைக் ரைடு உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்ட அஜித். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் பங்கேற்றார்.

author-image
WebDesk
New Update
அட, இந்த கவுன்சிலர் அஜித்துக்கு ஃப்ரெண்டா? ஜோடியாக ஒரு பைக் ரைட்

அதிமுக கவுன்சிலருடன் நடிகர் அஜித் பைக் ரைடு சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இவர்கள் இருவரும் ப்ரண்டா என்று பலரும் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள முக்கிய நடிகர்களில் ஒருவம் ஆவார். மேலும் பல தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகர் அஜித், நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலில சாதனை படைத்தது.

இயக்குனர் எச். வினோத் இயக்கிய இந்த படத்தில் பைக் ஸ்டண்ட் காட்சிகள் பாராட்டுக்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் 3-வது முறையாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். வலிமை நேர்கொண்ட பார்வை படங்களுக்கு பிறகு இந்த படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

மேலும் இந்த படத்தில் அஜி்த் இரட்டை வேடம் ஏற்றிருப்பதாகவும், ஒரு கேரக்டருக்கும் இன்னொரு கேரக்டருக்கும் வித்தியாசம் காட்ட அவது தனது லுக்கை மாற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், மறுபுறம் அஜித் தனது வழக்கமான பைக் ரைடு சென்று வந்துகொண்டிருக்கிறார்.

Advertisment
Advertisements

நடிப்பு மட்டுமல்லாது துப்பாக்கிச்சுடுதல் பைக் ரைடு உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்ட அஜித். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து பைக் ரைடு சென்றுள்ள அஜித் அதிமுக கவுன்சிலர் ஒருவருடன் இணைந்து ரைடு சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சி நகராட்சி 8-வது வார்டு அதிமுக கவுன்சிலர் வசந்த் உடன் அஜித் பைக் ரைடு சென்றுள்ளார். இந்த புகைப்படங்களை வசந்த் தனது சமூக வலைதளத்தில் பகிர்துள்ள நிலையில் இந்த படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: