/tamil-ie/media/media_files/uploads/2023/03/Ajith-and-Vijay.jpg)
Ajith kumar Father Dies; Vijay pay Tribute
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமாரின் தந்தை P.சுப்ரமணியம் (86) இன்று அதிகாலை 3:15 மணி அளவில் காலமானார். அவருக்கு அஜித் குமாருடன் சேர்த்து மூன்று மகன்கள் உள்ளனர்.
சுப்ரமணியம், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வயது மூப்பின் காரணமாக ஏற்படும் பிரச்சனைகளால் சிகிச்சை எடுத்து வந்தார்.
அஜித்தின் தந்தை மரணமடைந்த செய்தி அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். சமூக வலைதளங்கள் வாயிலாக அஜித்துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மேலும் அஜித் தந்தை மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் பிரபலங்கள், அஜித் ரசிகர்கள், நடிகர் நடிகைகள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில்,அஜித்தின் தந்தை சுப்ரமணியத்தின் உடல், சென்னை பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இப்போது நடிகர் விஜய், ஈ.சி.ஆர் சாலையில் உள்ள நடிகர் அஜித் இல்லத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். லியோ பட சூட்டிங்கில் இருந்து நேற்று இரவே அவர் சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் இறுதி அஞ்சலி முடிந்து அஜித் வெளியேறி விட்டாராம். அதை தெரிந்து கொண்ட விஜய், அஜித்தின் காரை பின் தொடர்ந்து அவருடைய வீட்டுக்கே சென்றிருக்கிறார். அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.