சென்னையில் அஜித் குமாரின் துணிவு படத்தின் படப்பிடிப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
நடிகர் அஜித் குமார் தற்போது துணிவு என்ற படத்தில் நடித்துவருகிறார். ஹெச். வினோத் படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அண்ணாசாலையில் இன்று நடைபெற்றது.
இதனால் அப்பகுதியில் ரசிகர்கள் கூடினார். போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதற்கிடையில் வாகனத்தின் மீது முகமூடி அணிந்தபடி நபர் ஒருவரின் படம் வைரலாகிறது.

அவர் அஜித் குமாரா அல்லது வேறொரு நபரா என்பது குறித்த தெரியவில்லை. இதனை சிலர் அஜித் குமார் என்றே கூறிவருகின்றனர். அஜித் குமார் வெளிநாட்டில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு அஜித் வெளிநாட்டில் பைக் ஓட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொலிக் காட்சிகள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் அஜித் குமார் தமிழ்நாடு திரும்பிவிட்டார், அவர் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார் என்றும் கூறுகின்றனர். ஆனால் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
அஜித் குமாரின் துணிவு படம், பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படத்தில் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil